அம்மா மீண்டு வருவார்... நம்பிக்கையோடு காத்திருக்கும் அதிமுக தொண்டர்கள்
சென்னை : அம்மா மீண்டு எழுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவரது முகத்தைப் பார்க்காமல் போகமாட்டோம் என்று இரவு பகலாக மருத்துவமனை வாசலில் காத்திருக்கின்றனர் சில அதிமுக தொண்டர்கள். இதில் மாற்றுத்திறனாளி மணிவண்ணன் என்பவரும், ஆட்டோ ஓட்டுநர் இளங்கோ என்பவரும் அடக்கம்.
முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22ம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 13 நாட்கள் ஆகியும் அவர் இன்னும் வீடு திரும்பவில்லை. அவருக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் மற்றும் சிறுநீரக தொற்றின் பாதிப்புகள் இருந்ததால், அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார் என்று செய்திகள் வெளியானது. முதல்வரை சந்திக்க அமைச்சர்கள் உட்பட யாருக்கும் அனுமதி கிடையாது.

அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் கூடி, அவர் விரைவில் குணமடைய வேண்டி கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். காலை முதல் மாலை வரை மருத்துவமனை வாசலில் காத்திருந்தாலும் இரவு நேரங்களில் அவரவர் தங்களின் வீடுகளுக்குத் திரும்புகின்றனர். ஒரு சிலர் மட்டுமே இரவு நேரத்திலும் மருத்துவமனை வாசலிலேயே காத்திருக்கின்றனர். இவர்களில் விழுப்புரம் சின்னச் சேலம் தாலுகாவைச் சேர்ந்த கே.மணிவண்ணன், மற்றவர் ஆட்டோ ஓட்டுநரான இளங்கோ.
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி கேட்டதும், மணிவண்ணன் சென்னை வந்திருக்கிறார். முதல்வர் குணமடைந்ததும் அவரை ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்பதற்காகவே மருத்துவமனை நுழைவு வாயில் அருகில் இருக்கும் சாலை ஓரம் தங்கியிருக்கிறார்.
இளங்கலை ஆங்கில இலக்கியமும், பி.எட் படிப்பும் படித்ததாகச் சொல்லும் மணிவண்ணன் அம்மா நலத்திட்டங்களினால் பயனடைந்தவர்.
இளம்பருவத்தில் ஏற்பட்ட போலியோ தொற்று காரணமாக எண்பது சதவிகிதம் உடல் ஊனமுற்றவர். சென்னை வந்த நாள் முதல் சாலையோரங்களில் தங்கி அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டு, ஜெயலலிதாவைக் காண இரவு பகலாக காத்திருக்கிறார்.
முதல்வரைக் காண அவ்வப்போது விழாக்களில் பங்கேற்க நான் சென்னை வந்திருக்கிறேன். சென்னைக்கு வருபவர்களுக்கு மக்கள் அன்பும், மரியாதையும் அளிக்கிறார்கள். நானே இதை அனுபவித்திருக்கிறேன் என்று கூறும் மணிவண்ணன், அம்மா விரைவில் வருவார். அவர் முகத்தைப் பார்த்த பின்னர்தான் ஊர் திரும்புவேன் என்று கூறுகிறார்.
போயஸ் கார்டனை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இளங்கோ, முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் முதல் மருத்துவமனை வாசலில் காத்திருக்கிறார். சங்கரன்கோவிலில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பிறகு, இளங்கோ ஆர்.கே.நகர் டீக்கடைகளில் வேலை செய்திருக்கிறார்.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், பல ஆயிரம் ஏழை மக்களோடு சேர்த்து முதல்வர் ஜெயலலிதா இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அம்மாக்கு அதிக கடவுள் நம்பிக்கை உண்டு. அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்கிறார் இளங்கோ.
இவர்கள் கட்சியில் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. ஜெயலலிதாவின் முகத்தை ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும் என்பதே இவர்களின் ஆசை. இதுபோன்ற உண்மையான தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றவாவது ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று எழ வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications