29 பேருடன் விமானம் மாயமானது அதிர்ச்சி அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் வழியில் 29 பேருடன் மாயமாகி இருப்பது தாங்கி கொள்ள முடியாத அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ''இந்திய விமானப் படைக்கு சொந்தமான AN-32 விமானம் சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் வழியில் 29 பேருடன் மாயமாகி இருப்பது தாங்கி கொள்ள முடியாத அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது. விமானத்தில் பயணித்த பாதுகாப்பு துறையைச் சேர்ந்தவர்கள் தற்போது என்ன நிலையில் இருக்கிறார்கள் என்ற அச்ச உணர்வும் ஏற்படுகிறது.

கடந்த ஆண்டும் இது போன்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டு அது துயரத்தில் முடிந்த நிலையில், தற்போது இன்னொரு விமானம் மாயமாகி இருப்பது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் பெரும் பதற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே சங்கடமாக இருக்கிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழக மக்களின் சார்பில் அவர்களுக்கு நம்பிக்கையைத் தர வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
இந்நிலையில், ஜூலை 7-ம் தேதி அந்த விமானத்தில் ஹைட்ராலிக் கசிவு ஏற்பட்டதாகவும், 14 -ம் தேதி அழுத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் வரும் பத்திரிகை செய்திகள் மிகவும் வேதனையளிக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் விமானம் இயக்கப்பட்டிருப்பதும், அது மாயமாய் மறைந்திருப்பதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது. தேடுதல் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில், விமானத்தின் தற்போதைய நிலை குறித்த உண்மைத் தகவல்கள் விரைந்து கிடைக்க வேண்டும் அது அனைவருக்கும் நிம்மதியளிக்கும் தகவலாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறேன்.
இனியாவது இத்தகைய நிகழ்வுகள் ஏற்படாத வகையில் விமானங்களின் பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்று பழுதுள்ள விமானங்களைப் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications