நெல்லையில் பெண் மீது ஆசிட் வீசிய ஆட்டோ டிரைவர்.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே களக்காட்டில் பெண் மீது ஆசிட் வீசியவர் கைது செய்யப்பட்டார். ராமலட்சுமி,25 என்பவர் மீது ஆசிட் வீசிய ஆட்டோ ஓட்டுநர் சின்னராசு கைது செய்யப்பட்டார். ஆசிட் வீச்சில் படுகாயமாடைந்த ராமலட்சுமி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த ராமலட்சுமி, அங்குள்ள தனியார் செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. திருமணத்துக்கு முன்பு சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சின்னராசு என்பவருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

ராமலட்சுமிக்கு இதுவரை குழந்தை பிறக்காத நிலையில், மீண்டும் சின்னராசுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ராமலட்சுமியிடம் செல்போனில் பேசி அவரை வரவழைத்திருக்கிறார் சின்னராசு. பின்னர் ராமலட்சுமியை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு களக்காடு சென்றார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சின்னராஜ் தான் மறைத்து வைத்திருந்த அமில பாட்டிலை எடுத்து ராமலட்சுமியின் முகத்தில் வீசி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
தலை மற்றும் உடலில் ஆசிட் பட்டதால் ராமலட்சுமி அலறித் துடித்தார். அவரது அலறலை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே ராமலட்சுமியை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடலில் 60 சதவீதம் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து ராமலட்சுமியிடம் நெல்லை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிச்சைராஜன் வாக்குமூலம் பெற்றார். தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுநர் சின்னராஜூவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications