சிதம்பரம் அருகே இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம்
சிதம்பரம் அருகே இரண்டரை வயது பெண் குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பழனிச்சாமி (45)என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர்: சிதம்பரம் அருகே இரண்டரை வயது பெண் குழந்தையை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த தீர்த்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் தனது நண்பர் பழனிச்சாமி என்பவருடன் வீட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் ராமமூர்த்தி அப்படியே படுத்து விட்டார்.

இந்த நிலையில் நள்ளிரவு ராமமூர்த்தியின் மனைவி விழித்து பார்த்தபோது அருகில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை காணாமால் போனதை கண்டு திடுக்கிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை தேடிய போது அருகில் உள்ள புதர் பகுதியில் பலத்த காயங்களுடன் குழந்தை மீட்டனர்.
இதையடுத்து குழந்தையை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், தந்தை ராமமூர்த்தியுடன் மது அருந்திய கூட்டாளி பழனிச்சாமி, அந்த பெண் குழந்தையை கடத்திச்சென்று பலாத்காரம் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பழனிச்சாமியை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications