சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் கவலைக்கிடம்.. தீவிர சிகிச்சை
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
விருதுநகர்: சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் உயிருக்கு போராடி வருகிறார்கள்.
இவர்கள் நான்கு பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கம்போல் பணியாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ராக்கெட் வெடிகளுக்கான ரசாயன மருந்து செலுத்தும் பணியும் நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் ரசாயனம் மருந்துகளை பயன்படுத்தும்போது திடீரென தீ பிடித்ததாக கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த வீரர்கள், ரசாயன மருந்துகளால் கொழுந்துவிட்டு எரிந்த தீயினை போராடி அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் ஊழியர்கள் ராமசாமி, முருகேசன், அழகுபாண்டி, மாரிபாண்டி ஆகிய 4 பேரையும் கருகிய நிலையில் மீட்டு சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்களது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து போலீசார் ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications