மதுரையில் பயங்கரம்.. தனியாக இருந்த 85 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொலை.. நகை மாயம்!
நகைக்காக மூதாட்டி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

மதுரை : வீட்டில் தனியாக இருந்த 85 வயது மூதாட்டி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசரடி ஆர்விநகர் முதல் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள். இவருக்கு 3 பெண் பிள்ளைகள். அவர்கள் அனைவரும் வெளியூரில் உள்ளனர். இதனால் மாரியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இவரை கவனித்து கொள்ள ஒரு பெண் வேலைக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். மாரியம்மாளுக்கு உணவு கொடுத்து பராமரிப்பதுதான் அவரது வேலை.

இந்நிலையில், இன்று மாரியம்மாளுக்கு தேவையான சமைத்து கொடுத்துவிட்டு அந்த பெண்ணும் தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது அந்த பகுதியில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் பக்கத்து வீட்டிலுள்ள இளைஞர் ஒருவர் மாரியம்மாளிடம் குடை கேட்கலாம் என்று கதவை தட்டினார்.
நீண்ட நேரம் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த இளைஞர் கதவை பலமாக தள்ளி உள்ளே வந்து பார்த்தார். அப்போது மாரியம்மாள் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் உடனடியாக கரிமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணையை துவங்கினர். அப்போது மாரியம்மாள் கழுத்திலிருந்த 5 பவுன் தங்க சங்கிலி காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதனால் மாரியம்மாள் நகைக்காகத்தான் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வீட்டில் தனியாகவும், ஆதரவற்றும் கிடக்கும் முதியோர்களை காக்க கோவையில் துவங்கியுள்ள 'ஹலோ திட்டம்' சமீபத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தினை மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தமிழக காவல்துறை செயல்படுத்தினால் நம் பாட்டிகள் பலரது உயிர் காப்பாற்றப்படுவது உறுதி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications