பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா?
சென்னை: பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா என்பது குறித்து சட்டசபையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பா.ம.க. உறுப்பினர் கணேஷ்குமார் பேசுகையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; மதுவிலக்கை நீங்கள் கொண்டுவரவில்லை என்றால், சட்டசபை தேர்தலில் பா.ம.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்தும் என்றார்.

அப்போது சபையில் சிரிப்பலை எழுந்தது. மீண்டும் பேசிய உறுப்பினர் கணேஷ்குமார், பா.ம.க. ஏன் ஆட்சிக்கு வர முடியாது. 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.வும் ஒரு இடத்தில் தான் வென்றது. பா.ம.க.வும் ஒரு இடத்தில் ஜெயித்தது. 1996-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. 4 இடங்களில் தான் வென்றது. பா.ம.க.வும் 4 இடங்களில் ஜெயித்து வரலாறு படைத்தது என்றார்.
அப்போது எழுந்து பேசிய அமைச்சர் பழனியப்பன், முதலில் உங்கள் கட்சி தலைவர் அன்புமணி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கணேஷ்குமார், ஏற்கனவே தர்மபுரி லோக்சபா தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications