என்னது ரஜினி அரசியலுக்கு வந்து தமிழகத்தை காப்பாற்ற அன்புமணி கோரிக்கையா?
தமிழகத்தை காப்பாற்ற ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அன்புமணி அழைத்ததாக செய்திகளை சில ஊடகங்கள் வெளியிடுகின்றன.
Recommended Video

சென்னை: தமிழகத்தை காப்பாற்ற ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அன்புமணி அழைத்ததாக செய்திகள் திரிக்கப்பட்டு சில ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் வெளியிடப்படுகின்றன. ஆனால் இவை உண்மைக்கு புறம்பானவை.
மதுரையில் பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அன்புமணி ராமதாஸ் எம்.பி. சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள தமிழகம் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. அதை காப்பாற்ற ரஜினி சீக்கிரமே அரசியல் களத்தில் குதிக்க வேண்டும்.

நிறைய பேர் தேவை
தமிழகத்தில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆபத்தான நிலையில் உள்ள தமிழகத்தை மீட்க நிறைய பேர் தேவைப்படுகிறார்கள் என்று அன்புமணி கூறியதாக செய்திகள் வெளியாகின.

நிர்வாக திறமைசாலிகள்
ரஜினி தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று மே மாதம் கூறியபோதே தமிழகத்துக்கு தேவை நடிகர்கள் அல்ல, நல்ல நிர்வாக திறமைசாலிகள். அது ரஜினியிடம் இல்லை. நடிகர்கள் நாடாண்டது போதும் என்று ரஜினிக்கு எதிராகவே பாமக பேசி வந்தது.

மதுரையில் பேசியது இவைதான்
இந்நிலையில் ரஜினி குறித்து பாமகவின் திடீர் நிலைப்பாடு என்ற ரீதியிலேயே இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஆனால் அவர் மதுரையில் பேசியது இவை தான்.

ஊழல் ஒழிப்பு ஆண்டு
"தமிழகம் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது. முதலில் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும், பிறகுதான் முன்னேற்ற வேண்டும். மேலும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் 2018-ஆம் ஆண்டை ஊழல் ஒழிப்பு ஆண்டாக அறிவிக்க உள்ளோம்" என்று தான் அன்புமணி கூறியிருந்தார். இதுதான் அவரது உண்மையான பேச்சு.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications