லோக்சபாவில் அன்புமணி.. ராஜ்யசபாவில் திருச்சி சிவா.. குறைந்த நாட்கள் சபைக்கு வந்தவர்கள்!
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் யார் யார் எத்தனை நாட்களுக்கு சபைக்கு வந்தார்கள் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
தமிழக எம்.பிக்களைப் பொறுத்தவரை பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ், லோக்சபா கூட்டத் தொடரில் குறைந்த நாட்கள் சபையில் கொண்டவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்.
ராஜ்யசபாவைப் பொறுத்தவரை திமுக உறுப்பினர் திருச்சி சிவா இதில் முதலிடத்தில் இருக்கிறார்.

பட்ஜெட் கூட்டத் தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 14 வரை நடந்தது. மொத்தம் 27 நாட்கள் அலுவல்கள் நடந்தன.

அன்புமணி 15
இதில் தமிழக எம்.பிக்களில் லோக்சபாவில் அன்புமணிதான் குறைந்த அளவிலான நாட்களில் சபைக்கு வந்துள்ளார். அவர் 15 நாட்களுக்கு வந்துள்ளார்.

திருச்சி சிவா 11
ராஜ்யசபாவில் திமுகவின் திருச்சி சிவா குறைந்த அளவாக 11 நாட்கள் சபைக்கு வந்துள்ளார்.

ரபி பெர்னார்ட் 15 -தங்கவேலு 18
ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர் தங்கவேலு 18 நாட்களும், அதிமுகவின் ரபி பெர்னார்ட் 15 நாட்களும் வந்துள்ளனர்.

சோனியா 21
அகில இந்தியத் தலைவர்களில் சோனியா காந்தி 21 நாட்கள் வந்துள்ளார்.

ராகுல் காந்தி 22
ராகுல் காந்தியின் பிரசன்ட் கணக்கு 22 ஆகும்.

தேவெ கெளடா 23
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவெ கெளடா 23 நாட்கள் வந்துள்ளார். ஆனால் இவர் பேசியது மிக மிக குறைவு.

வருண் காந்தி 20
மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி 20 நாட்கள் வந்து போயுள்ளார்.

மன்மோகன் சிங் புல் பிரசன்ட் !
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 27 நாட்களும் வந்துள்ளார். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி 26 நாட்கள் வந்துள்ளார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications