தேசிய விருது பெற்ற திரைக் கலைஞர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
டெல்லியில் 64வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது.
சென்னை: தேசிய விருது பெற்ற வைரமுத்து உள்ளிட்ட திரைக் கலைஞர்களுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் 64-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கியிருக்கிறார். தேசிய திரைப்பட விருது பெற்ற தமிழ் திரைப்படக் கலைஞர்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தர்மதுரை திரைப்படத்திற்கு பாடல் எழுதியதற்காக கவிஞர் வைரமுத்து ஏழாவது முறையாக தேசிய விருது பெற்றிருக்கிறார். ஒரு பாடலாசிரியர் அவரது வாழ்நாளில் ஏழு முறை தேசிய விருது பெறுவது அரிதிலும் அரிதான ஒன்றாகும். செயற்கரிய அந்த சாதனையை கவிஞர் வைரமுத்து பெற்றிருக்கிறார்.
சமூக விழிப்புணர்வூட்டும் கதைக்களம் கொண்ட ஜோக்கர் தமிழ் மொழிப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் பாடல்களைப் பாடிய சுந்தரா ஐயர், 24 என்ற திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு ஆகியோரும் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதுகளை பெற்றுள்ளனர்.
சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்கள் இனிவரும் காலங்களில் கூடுதல் திறமையை வெளிப்படுத்தி மேலும் பல விருதுகளை வெல்ல வாழ்த்துகிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications