பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.18 வரை குறைக்கலாம்.. அன்புமணி யோசனை !
சென்னை: பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.18 வரை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல் விலைகளை மீண்டும் ஒருமுறை உயர்த்தியிருப்பதன் மூலம் இந்திய மக்களுக்கு மிக மோசமான புத்தாண்டு பரிசை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் வழங்கியிருக்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.1.66 உயர்ந்து ரூ.70.07-க்கும், டீசல் விலை ரூ.1.19 உயர்ந்து ரூ.59.47-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததைக் காரணம் காட்டித் தான் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், டிசம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான 15 நாட்களின் சராசரி விலையுடன் ஒப்பிடும்போது டிசம்பர் 16 முதல் 30 ஆம் தேதி வரையிலான 15 நாட்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் சராசரி விலை பெரிய அளவில் உயரவில்லை. இரு காலகட்டங்களிலுமே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 54 அமெரிக்க டாலர் என்ற நிலையில் தான் இருந்து வந்தன. ஆனால், இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் கடந்த 15 நாட்களில் ஏதோ ஒரு சில நாட்களில் மட்டும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருந்ததைக் காரணம் காட்டி உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இது முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்ட முடிவாகும்.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூன், - ஜூலை மாதங்களில் தான் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பீப்பாய் 147 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டது. ஆனால், அப்போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.73.00 என்ற அளவிலேயே இருந்தது. அதன்படி பார்த்தால் பன்னாட்டுச் சந்தையில் இப்போது கச்சா எண்ணெயின் விலை 53.04 டாலராக உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 27.00 ரூபாய் என்ற அளவில் தான் இருக்க வேண்டும். ஆனால், அதைவிட 160 விழுக்காடு அதிகமாக ரூ.70.07-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசின் அனைத்து வருவாய் தேவைகளுக்கும் எரிபொருட்கள் மீதான வரிகளை சார்ந்து இருப்பது தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாகும். மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் இன்றைய (02.01.2017) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.28.88 மட்டுமே. இது கச்சா எண்ணெய் மீதான சுங்கவரியையும் உள்ளடக்கியதாகும்.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications