• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  டிவிட்டரை மிரட்டிய அன்புமணி - தமிழிசை சண்டை.. நடந்தது என்ன.. ஒரு விறுவிறு தொகுப்பு!

  |
   டிவிட்டரை மிரட்டிய அன்புமணி - தமிழிசை சண்டை- வீடியோ

   சென்னை: தர்மபுரி எம்.பியும், பாமக இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் இடையே நடந்த டிவீட் சண்டை அனலைக் கிளப்பி விட்டது.

   இருவரும் மாறி மாறி போட்ட ட்வீட்டுகள் கடைசியில் இரு கட்சிகளுக்கு இடையே சண்டையை மூட்டி தொண்டர்கள் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது.

   அன்புமணி ராமதாஸ் போட்ட சரமாரியான டிவீட்டுகளில் தமிழிசையை நோக்கி பல கேள்விகளை முன்வைத்திருந்தார். இதற்கு சளைக்காமல் பதில் டிவீட் போட்டபடி இருந்தார் தமிழிசை. அன்புமணியின் டிவீட்டுகளின் தொகுப்பு:

   இது கூட தெரியாத தலைவி

   மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான். மதுரை தோப்பூரில் 100 ஏக்கரில் எய்ம்ஸ் அமைக்க முதல் தவணையாக ரூ.150 கோடி ஒதுக்கி 2008ல் அடிக்கல் நாட்டியதும் நானே. ஆனால், பின் வந்த அதிமுக அரசு அதை செயல்படுத்தவில்லை. இதுகூட தெரியாதவர் தேசத்தை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவி!

   அரசியலை வேடிக்கை பார்த்தவர்

   மதுரைக்கு 2008-ஆம் ஆண்டில் முதன்முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான் என்பது அரசியல் அனுபவம் கொண்டவர்களுக்கு தெரியும். அப்போது அரசியலை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு எங்கிருந்து தெரியப்போகிறது!

   சேலம் ரயில்வே கோட்டம்

   பல்வேறு தரப்பினரின் தடைகளையும் முறியடித்து மேற்கு மாவட்ட மக்களின் நீண்டகால கனவை நிறைவேற்றும் வகையில் சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு சேலம் ரயில்வேக் கோட்டம் அமைத்தது.

   தூத்துக்குடி வரை ரயில் பாதை

   சென்னை- புதுச்சேரி- கடலூர் இடையே மகாபலிபுரம் வழியாக கிழக்குக் கடற்கரையோர ரயில் பாதை திட்டம். இந்தப் பாதையை சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி பாதையுடன் இணைத்து தூத்துக்குடி வரை நீட்டிக்கும் திட்டம். ஈரோடு - பழனி இடையே அகலரயில் பாதை. அத்திப்பட்டு - புத்தூர் இடையே இன்னொரு ரயில் பாதை.

   பறக்கும் ரயில் திட்டம்

   நிறைவேற்றப்படாமல் கிடந்த சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை வேளச்சேரி வரை நீட்டித்தது. பரங்கிமலை வரை நீட்டிப்பதற்கான பணிகளில் 90 விழுக்காட்டை நிறைவு செய்தது. ஜோலார்பேட்டை - திருவண்ணாமலை இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை தயாரித்து திட்டக்குழு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

   அப்துல் கலாமே பாராட்டினார்

   ராமேஸ்வரத்தை அடுத்த பழமைவாய்ந்த பாம்பன் தொடர்வண்டி பாலத்தை, அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களே வியக்கும் வகையில் புதுப்பித்து பாராட்டு பெற்றது.

   அகலப் பாதை திட்டம்

   சென்னை எழும்பூர் - சென்ட்ரல் தொடர்வண்டி நிலையங்களை இணைப்பதற்கான திட்டத்தை தயாரித்து அனுமதி பெற்றது.
   சென்னை -இராமேஸ்வரம் இடையிலான அகலப்பாதை திட்டத்தை நிறைவேற்றி முடித்து போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தது.

   திருவண்ணாமலை வழியாக நகரி

   திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக நகரி வரை புதிய ரயில்பாதை அமைக்கத் திட்டம் வகுத்து, குறிப்பிடத்தக்க அளவுக்கு பணிகளை முடித்தது.

   இரட்டை ரயில் பாதை

   சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கான பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவதில் பெருமளவு பணிகளை நிறைவேற்றி முடித்து வைத்தது.

   35 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள்

   பெரம்பலூர் வழியாக சிதம்பரம்- ஆத்தூர் இடையிலும், தஞ்சாவூர் - அரியலூர் இடையிலும் புதிய ரெயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை முடித்து திட்ட அறிக்கைகளை தயாரித்தது. தமிழகம் முழுவதும் 35 இடங்களில் தொடர்வண்டி மேம்பாலங்களை அமைத்தது.

   16 முறை சந்தித்துள்ளேன்

   இதற்கும் மேலாக தமிழிசை கூறும் தருமபுரி-மொரப்பூர் இணைப்புத் திட்டத்திற்கும் பா.ம.க. அமைச்சர்கள் காலத்திலேயே அனுமதி வழங்கப்பட்டு விட்டது. பின்னர் அத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்தாததால், அதுகுறித்து வலியுறுத்த ரயில்வே அமைச்சர்களை கடந்த 4 ஆண்டுகளில் 16 முறை சந்தித்துள்ளேன்.

   அய்யோ அய்யோ

   அண்மையில் நடந்த சந்திப்பின்போது மொரப்பூர் - தருமபுரி திட்டம் மட்டுமின்றி, தமிழகத்தில் நிலுவையில் உள்ள மற்ற திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இது கூட தெரியாதவர் தான் தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர்.... அய்யோ... அய்யோ!🤦‍♂️

   மூர்த்தியிடம் ஒப்படைத்த வாஜ்பாய்

   தமிழிசை சவுந்தரராஜனின் அரசியல் மற்றும் பொது அறிவை வளர்த்துக் கொள்ள ஒரு தகவல்: 2002-ல் பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களே அவரது தொகுதியான லக்னோ ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணியை பா.ம.க. அமைச்சர் ஏ.கே. மூர்த்தியிடம் தான் ஒப்படைத்தார்; பணிகளை வியந்து பாராட்டினார்.

   வாஜ்பாய் மீது சேறு இறைக்கிறார்

   வாஜ்பாய் ஆட்சியிலும் பாமகவின் ஏ.கே. மூர்த்தி ரயில்வே அமைச்சராக இருந்தார். பா.ம.கவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு வாஜ்பாய் மீது சேறும், சகதியும் வீசிக்கொண்டிருக்கிறார் அரசியல் வரலாறு தெரியாத தமிழிசை சவுந்தரராஜன்.

   திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

    
    
    
   English summary
   PMK leader Dr Anbumani Ramadoss posted volley of questions on BJP president Dr Tamilsai Soundararajan's claims in PMK and Anbumani on some of the Health department related issues in TN.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more