இந்த 2 கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா ம.ந.கூ தலைவர்கள்? - அன்புமணி
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ள வைகோ மற்றும் ம.ந.கூ தலைவர்கள் இரண்டே இரண்டு கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும் என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேமுதிக - ம.ந.கூட்டணி இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ், "தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஒரு சந்தர்பதவாத கூட்டணி. விஜயகாந்த் கடந்த 3 மாதமாக அதிமுக, பாமகவைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். திமுக, காங்கிரஸ், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த வாரம் ஒரு முடிவை அறிவித்தார். இன்று ஒரு முடிவை அறிவித்திருக்கிறார். இந்த முடிவை கடந்த 2 அல்லது 3 மாதத்திற்கு முன்பே அறிவித்திருக்கலாம்.

மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம். அது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. சட்டமன்றத் தேர்தல் முடிந்து உறுப்பினர்கள் தான் முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று வைகோ கூறினார். இன்று அதையெல்லாம் கடந்த விஜயகாந்த் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள்.
அடுத்து ஒரு தலித் சமுதாய முதல்வர் வேட்பாளரை ஏற்றுக்கொள்ளாத மக்கள் நலக் கூட்டணி, இன்று விஜயகாந்த் அவர்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை அவர்கள் சொல்ல வேண்டும். இந்த அரசியல் சூழல் எங்களுக்கு ஒரு சாதகமான சூழல். பாமகவின் வெற்றிக்கு வழி பிறந்திருக்கிறது. திமுக, அதிமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். அதற்கு மாற்று யார் என்று மக்களுக்கு தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications