2016ல் தமிழ்நாட்டில் பாமக ஆட்சிதான்: சொல்கிறார் அன்புமணி
தர்மபுரி: 2016ல் அ.தி.மு.க.வை வீழ்த்தி, ஆட்சியை பிடிப்போம் என பாமகவின் இளைஞரணித்தலைவரும் தர்மபுரி எம்.பியுமான அன்புமணிராமதாஸ் கூறியுள்ளார்.
தர்மபுரியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பா.ம.க. சார்பில் தர்மபுரி வன்னியர் மண்டபத்தில் வாக்காளர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது,
''தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது என்பது வருத்தாக இருந்தாலும், பெரிய பண அலையை எதிர்த்து தர்மபுரியில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
இது என்னுடைய வெற்றி அல்ல. உங்களுடைய வெற்றி. என்னை தேர்ந்தெடுத்ததற்கு மனமார்ந்த நன்றிகள். அதேபோல் பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், கூட்டணி கட்சி தலைவர்கள் விஜயகாந்த், வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு தொகுதிகளில் மட்டும் நாம் வெற்றி பெற்றாலும், தி.மு.க பூஜ்ஜியம் ஆகியிருக்கிறது. தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்றுதான் இந்த கூட்டணி அமைத்தோம், முதல் வெற்றியை தர்மபுரியில் பெற்றுவிட்டோம் இது 2016 தமிழகம் முழுவதும் பரவ வேண்டும். அப்போது அ.தி.மு.கவையும் வீழ்த்துவோம். அடுத்த ஆட்சி நம்முடையதுதான்'' என்றார் அன்புமணி ராமதாஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications