அசிங்கப்பட்டார் ஆட்டோ பாசேஞ்சர்.. ஏற்காடு ஆட்டோ டிரைவர்கள் பற்றி அமெரிக்க போலீசுக்கு புகார்!
Recommended Video

சேலம்: ஏற்காட்டில் ஆட்டோ டிரைவர்கள் அதிகம் பணம் கேட்பதாக அமெரிக்க போலீசாரிடம் மலையாளி ஒருவர் புகார் அளித்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கொச்சியை சேர்ந்த அருணானந்த் என்பவர் சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்கு ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அவர், டிவிட்ரில் அதை புகாராக பதிவு செய்தார். "1.5 கி.மீ தூரத்திற்கு ஆட்டோக்காரர்கள் 50 ரூபாய் கட்டணம் கேட்கிறார்கள். இதை சரி செய்ய ஏதேனும் சிஸ்டம் உள்ளதா" என அவர் அதில் தெரிவித்தார்.
|
புகார் பதிவு
அத்தோடு விடவில்லை. சேலம் போலீஸ் டிபார்ட்மென்ட் என்ற ஐடியை டேக் செய்தார். அது வெரிஃபைடு செய்யப்பட்ட ஐடி என்பதால் அது காவல்துறை ஐடி என நினைத்து புகாரை தெரிவிக்க அவர் இவ்வாறு செய்தார். மேலும் தமிழக முதல்வர் மற்றும் இரு நாளிதழ்கள் டிவிட்டர் ஐடிகளையும் அவர் டேக் செய்துள்ளார்.

அமெரிக்க காவல்துறை
ஆனால் இதில்தான் ஒரு தப்பு செய்துவிட்டார் அருணானந்த். அவர் டேக் செய்த சேலம் போலீஸ் டிபார்ட்மென்ட் என்ற ஐடி, தமிழகத்திலுள்ள சேலம் போலீசாருடையது கிடையாது. அமெரிக்காவிலுள்ள காவல்துறை ஐடி அது.
|
நாங்கள் அவுங்க இல்லப்பா
டிவிட்டரிலேயே 'அமெரிக்க சேலம்' போலீசாரும் பதில் அளித்துள்ளனர். அந்த பதிலில், நாங்கள், அமெரிக்காவின் ஒரேகான் பகுதியிலுள்ள சேலம் போலீஸ் என கூறப்பட்டுள்ளது. இந்த டிவிட் மற்றும் அதற்கு அமெரிக்க போலீசார் கொடுத்த ரிப்ளே என்பது இணையத்தில் வைரலாகியுள்ளது.
— D Roopa IPS (@D_Roopa_IPS) November 23, 2017 |
ரூபாவுக்கும் சிரிப்பு
கர்நாடக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றும் ரூபாவும், இந்த டிவிட்டை ஷேர் செய்துள்ளார். ஸ்மைலி எமோஜிகளை போட்டுள்ளார். இவர்தான் சசிகலா சிறையில் நடத்திய சாம்ராஜ்யத்தை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications