நீட் தேர்வை ரத்து செய்.. அனிதா தற்கொலையால் கொந்தளித்த கிராமத்தினர், மாணவர்கள்!
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர்: அரியலூர் குழுமூர் கிராமத்தில் உள்ள அனிதாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.
பிளஸ் 2வில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்தார் அனிதா. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அனிதாவின் கட்ஆஃப் மதிப்பெண் 196.5 பெற்றுள்ளார். ஆனால் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தகுதி தேர்வில் அவர் 86 மதிப்பெண்களே பெற்றிருந்தார்.

இந்த ஆண்டு நீட் தேர்வு அடிப்படையிலேயே கவுன்சிலிங் நடத்தி இட ஒதுக்கீடு இதனையடுத்து கடந்த சில நாட்களாக விரக்தியின் உச்சத்தில் இருந்த மாணவி அனிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் தற்கொலைக்குக் காரணம் மத்திய மாநில அரசுகளே காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இந்திய மாணவர்கள் சங்கத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications