அனிதா மரணத்துக்கு நீதி கோரி தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்- நூற்றுக்கணக்கானோர் கைது
தமிழகம் முழுக்க நீட்டுக்கு எதிராகவும், அனிதாவின் சாவுக்கு நியாயம் கேட்டும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை: தமிழகம் முழுக்க நீட்டுக்கு எதிராகவும், அனிதாவின் சாவுக்கு நியாயம் கேட்டும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.

சென்னையில்....
இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியினர், அண்ணா சாலையில் புரட்சி கர மாணவர் இளைஞர் முன்னணியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பல்வேறு போராட்டங்கள்
சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் மாணவி அனிதாவின் இறப்புக்கு நியாயம் கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். கோவையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

விசிக கட்சியினர்
மதுரை, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் குண்டுகட்டாக கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர்.

சென்னை அண்ணா சாலை
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் நீட் கவுன்சலிங் நடைபெறும் பல்நோக்கு மருத்துவமனை அருகே புரட்சிகர மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு
இதேபோல் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications