அண்ணா நூலகத்தை நீங்கள் பராமரிக்கவில்லை என்றால் ....தமிழக அரசுக்கு எச்சரிக்கையுடன் ஹைகோர்ட் கெடு!
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தமிழக அரசு பராமரிக்கவில்லை என்றால் ஐகோர்ட் குழு அமைத்து பராமரிக்கும் என்று சென்னை ஐகோர்ட் அதிரடியாக அறிவித்துள்ளது.
சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிப்பது தொடர்பான வழக்கில் இறுதி கெடுவை தமிழக அரசுக்கு விதித்துள்ளது சென்னை ஐகோர்ட்.
சென்னை கோட்டூர்புரத்தில் அதி நவீன வசதிகளுடன் அருமையாக உருவாக்கப்பட்டது அண்ணா நூற்றாண்டு நூலகம். திமுக தலைவர் கருணாநிதியின் கனவு திட்டமாக அறிவிக்கப்பட்ட நூலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்ட நிலையில், தமிழகதில் ஆட்சி மாறியது. அடுத்து வந்த அதிமுக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மூடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தது. இதனையடுத்து, பிரச்சனை ஐகோர்ட்டுக்கு சென்றது. இதனால் நூலகம் மூடப்படாமல் காப்பாற்றப்பட்டாலும், பராமரிப்பு என்பது இல்லவே இல்லை.

இந்நிலையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கோரி பேராசிரியர் மனோன்மணியம் ஐகோர்ட்டில் வழக்கை ஒன்றை தொடர்ந்தார். அவர் அளித்திருந்த மனுவில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை; ஏ.சி. வசதிகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது; முழுமையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்துத் தரப்படவில்லை; கலையரங்கம், படிப்பகம் ஆகியவற்றில் விளக்குகள் இல்லை; இவற்றை எல்லாம் சரி செய்து நூலகம் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் மனோன்மணியம் கோரியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா நூலகத்தை முறையாக பராமரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டபடி டிசம்பர் 14ம் தேதிக்குள் பராமரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி கவுல் இறுதி கெடு விதித்தார். மேலும், நூலகத்தை பராமரிக்க தமிழக அரசு முழு ஆதரவு அளிக்கவில்லை என்றால் ஐகோர்ட் தலையிட்டு குழு அமைத்து பராமரிக்கும் என்றும் தலைமை நீதிபதி அதிரடியாக தெரிவித்தார்.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அக்டோபர் 30ம் தேதிக்குள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாக பராமரித்து இருக்க வேண்டும் என்றும், இதனை இறுதி வாய்ப்பாக அரசு கருத வேண்டும் என்றும் இல்லை என்றால் கோர்ட் முன்வந்து குழு அமைத்து நூலகத்தை பராமரிக்கும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications