அண்ணா பல்கலை. ஊழலுக்கு பின் இருக்கும் மாஸ்டர் மைண்ட் பேராசிரியர் உமா.. யார் இவர்?
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் முக்கிய காரணகர்த்தாவாக பேராசிரியர் ஜி.வி உமா இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் முக்கிய காரணகர்த்தாவாக பேராசிரியர் ஜி.வி உமா இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு தற்போது தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 17 மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அண்ணா பல்கலையில் விடைத்தாள் மறுத்திருத்தம், மறுகூட்டலில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருக்கிறது. தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள்.

பல கோடி ஊழல்
இதில் 200 கோடி ரூபாய் வரை பணம் கைமாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறைகேட்டை அண்ணா பல்கலையை சேர்ந்த ஜி வி உமா என்ற பேராசிரியைதான் நடத்தி இருக்கிறார். ஜி வி உமா தலைமையில்தான் இந்த முறைகேடு நடந்து இருக்கிறது. இவருக்கு கீழ் 9 பேராசிரியர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். தற்போது இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

என்ன வேலை
இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்துள்ளார். அப்போது தனக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி இவர் லஞ்சம் வாங்கியுள்ளார். ஒரு மாணவரிடம் 10 ஆயிரம் ரூபாய் என்று ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். மூன்று வருடம் நடந்த தேர்விலும் இந்த முறைகேடு நடந்துள்ளது.

என்ன துறையில் இருக்கிறார்
இவர் அண்ணா பல்கலையில் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் பேராசிரியராக இருக்கிறார். அதே சமயத்தில் அண்ணா பல்கலை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்துள்ளார். தனக்கு கீழ் இருந்து திண்டிவனம் தேர்வு மைய அதிகாரிகளை, ஆசிரியர்களை இதில் பயன்படுத்தி இருக்கிறார். அதேபோல் இன்னும் சில ஆசிரியர்களையும் இவர் இந்த ஊழலில் பயன்படுத்தியுள்ளார்.

முக்கியமானவர்
சில ஆசிரியர்களை மிரட்டி இவர் பணிய வைத்ததாக கூறப்படுகிறது. இவர் 21 வருடமாக கல்லூரி ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். அதேபோல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு முன்னாள் அண்ணா பல்கலை துணை வேந்தர் ஒருவர் உதவியதாக கூறப்படுகிறது. அவரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications