என்னாச்சு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு?.... ஒவ்வொரு பாடப் பிரிவாக மூடும் அவலம்
நெல்லை: அண்ணா பல்கலைகழகம் நெல்லை மண்டலத்தில் இளங்கலை பாடப்பிரிவை தொடர்ந்து சில முதுகலை பாட பிரிவையும் இழுத்து மூட முடிவு செய்திருப்பதால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் இருப்பது போல் நெல்லையிலும் அண்ணா பல்கலை கழகம் தொடங்கப்பட்டது. பி.இ (ஜியோ, சிஎஸ், ஐடி) மற்றும் பகுதி நேர பாடப்பிரிவுகளாக பி.இ சிவில், மெக்கானிக்கல், டிரிபிள் இ ஆகிய பிரிவுகளும் தொடங்கப்பட்டன.

அடுத்த கல்வி ஆண்டிலேயே உயர் கல்விகளும் தொடங்கப்பட்டன. எம்.இ. முதுகலையில் 10 பிரிவுகளும், எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற முதுகலை பட்டபடிப்புகளும கற்று தரப்படுகின்றன. இங்கு கல்வி கட்டணம் குறைவு என்பதாலும், பகுதி நேரமாக படிக்க வசதி இருந்ததாலும் ஏராளமான தென் மாவட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்தனர்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைகழகம் என்ற பெயர் மாற்றப்பட்டு அண்ணா பல்கலை கழக மண்டல அலுவலகம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இங்கு துணை வேந்தர், பதிவாளருக்கு பதில் டீன் பொறுப்பில் உள்ளார்.
அதே ஆண்டில் வேலைக்கு செல்வோருக்கு பயன் அளித்து வந்த பகுதி நேர படிப்புகள் இழுத்து மூடப்பட்டது. மேலும் எம்.இ. பிரிவில் இரண்டு பிரிவுகள் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து அப்போதைய மேயர் தலையிட்டதால் நிறுத்தப்பட்ட எம்.இ. பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. ஆனால் கடந்த ஆண்டு இளஙகலை பாடப்பிரிவுகள் முழுமையாக நிறுத்தப்பட்டது. இந்த பிரச்சனை கடந்த வருடம் பெரிய அளவில் வெடித்தது.
இதனால் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த கல்லூரியில் சேர்ந்து நேரடியாக குறைந்த செலவில் இளங்கலை பயிலும் வாய்ப்பை இழந்தனர். இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டில் முதுகலையிலும் கை வைக்க அண்ணா பல்கலை கழகம் முடிவு செய்திருபபதாக கூறப்படுகிறது. இதனால் இளங்கலையை தொடர்ந்து, முதுகலையிலும் வாய்ப்பு பறிபோய்விடுமோ என்று மாணவர்களும், பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications