என்னாது! ஆளுநர் தேர்தலில் நிற்கணுமா? உதயநிதியால் குரூப் 4 தேர்வை எழுத முடியுமா?.. அண்ணாமலை காட்டம்
நெல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவியை தேர்தலில் போட்டியிட சொல்லும் உதயநிதியால் குரூப் 4 தேர்வெழுத முடியுமா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வு விலக்கிற்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய அரசையும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையும் கண்டித்து திமுகவின் பல்வேறு அணிகள் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இது சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அவர் பேசுகையில் இதுவரை 21 உயிர்களை நீட் தேர்விற்கு பலி கொடுத்திருக்கிறோம். இவற்றை எல்லாம் நாம் தற்கொலை என பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நான் சொல்கிறேன். இந்த 21 மரணங்களும் தற்கொலை அல்ல. கொலை. இந்த கொலை செய்தது ஒன்றிய பாஜக அரசு. அதற்கு துணைநின்றது அதிமுக.
நான் நீட் குறித்து 5 ஆண்டுகளாக பேசிவிட்டேன். இனிமேலும் பேச தயாராக இருக்கிறேன். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நான் அமைச்சராகவோ எம்எல்ஏவாகவோ பங்கேற்கவில்லை. நான் ஒரு சாதாரண மனிதராக உதயநிதி ஸ்டாலினாக நீட்டால் இறந்தவர்களுக்கு அண்ணனாக பேச வந்திருக்கிறேன். என் பதவியே போனாலும் பரவாயில்லை என்றுதான் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன்.
இங்கே ஒரு பக்கம் நாம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் போல் கூட்டம் நடத்தி வருகிறார்.
அதில் ஒரு மாணவியின் தந்தை அம்மாசியப்பன் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ஐ வில் நெவர் என்கிறார். நான் கேட்கிறேன், Who are you? எங்கள் முதல்வர் சொல்கிற வேலையை ஒன்றிய அரசிடம் கொடுப்பதுதான் உங்கள் வேலை. நீங்கள் ஒரு தபால்காரர். நீங்கள் ஆர் என் ரவி அல்ல, ஆர் எஸ் எஸ் ரவி. ஆளுநருக்கு நான் சவால் விடுகிறேன். நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் ஏதோ ஒரு தொகுதியில் தேர்தலில் நிற்க முடிவு செய்யுங்கள்.
அங்கே எங்கள் கழகத்தின் கடைக்கோடி தொண்டரை நிற்க வைக்கிறோம். உங்களால் வெற்றி பெற முடியும் என்றால் அப்போது மக்களை சந்தியுங்கள். உங்கள் சித்தாந்தங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் போய்ச் சொல்லுங்கள். நீங்கள் வென்றதும் வாருங்கள், அதன் பிறகு நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன். தமிழ்நாட்டு மக்களை பற்றி உங்களுக்கு தெரியாது என்றார்.

இதுகுறித்து நெல்லையில் நடந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில் நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது. அமைச்சர் உதயநிதிக்கு எதை பேச வேண்டும் எதை பேசக் கூடாது என தெரியவில்லை. ஆளுநர் தேர்தலில் நிற்க முடியுமா என கேட்டார்.
நான் கேட்கிறேன் , ஆளுநர் ஆர்.என்.ரவியை தேர்தலில் போட்டியிட சொல்லும் உதயநிதியால் குரூப் 4 தேர்வெழுத முடியுமா? திமுகவில் உள்ள சீனியர்கள் உதயநிதிக்கு அரசியலமைப்பு சட்டத்தை சொல்லித் தர வேண்டும். நான் பாஜக மாநில தலைவராக இருந்தாலும் என்னை விட சீனியரான பொன்னார் அண்ணன் இன்று வரை நான் இப்படி பேச வேண்டும். இப்படி பேசக் கூடாது என அறிவுறுத்துவார். இதை நான் வரவேற்கிறேன். எனவே உதயநிதியும் எப்படி பேச வேண்டும் என கற்றுக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போல் உதயநிதி பேசக் கூடாது. இவ்வாறு அண்ணாமலை பேசினார். திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரையும் குஷ்புவையும் விமர்சித்ததால் அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டார். பிறகு நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications