அம்மா குடிநீர் விற்பனைக்கு போராடினீங்க.. இப்போ நீங்களே ஆவினில் விற்கலாமா.. கொந்தளித்த அண்ணாமலை
சென்னை: குடிநீருக்கு மக்கள் வரி செலுத்துகிறார்கள், ஆனால் சரியான குடிநீர் இல்லாமல் அவதியுறும்நிலையில் அதற்கு தீர்வு காணாமல் குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக அரசு சார்பில் 2013 ஆம் ஆண்டு அம்மா குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகம் சார்பில் பணிமனைகளில் ஒரு லிட்டர் ரூ 10 விற்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இந்த திட்டம் திடீரென 2020- ஆம் ஆண்டு திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆவின் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் குடிநீர் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதற்கட்டமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை குடிநீர் பாட்டில்களை அறிமுகம் செய்கிறார்கள். நாளொன்றுக்கு 1 லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யவும் ஆவின் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தண்ணீர் பாட்டில்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளியை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் வெளியிட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோரும் குடிநீர் ஆலையானது அனைத்து சட்டப்பூர்வ உரிமங்களுடன், அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளின்படி கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் எடுப்பவரிடம் தேவையான அளவிற்கு குடிநீர் ஆலைகள் மற்றும் இயந்திரங்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ரூ 10-க்கு அம்மா குடிநீர் பேருந்து நிலையங்களில் வழங்கப்பட்டு வந்தன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை ஒழிக்கும் திமுக அரசு இந்த ரூ 10 குடிநீர் பாட்டில் விற்பனையையும் இல்லாமல் ஆக்கவே ஆவின் குடிநீர் என அதிமுகவினர் விமர்சித்துள்ளனர்.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஆவின் நிறுவனத்தின் மூலமாகக் குடிநீர் பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2014-2015ஆம் ஆண்டு, குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாகக் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவித்த போது, அதனை இலவசமாக வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருப்பது, திமுகவினர் பலன் பெறுவதற்காகவோ, என்ற சந்தேகம் எழுகிறது.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஆவின் நிறுவனத்தின் மூலமாகக் குடிநீர் பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2014-2015ஆம் ஆண்டு, குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாகக் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவித்த போது, அதனை இலவசமாக வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருப்பது, திமுகவினர் பலன் பெறுவதற்காகவோ, என்ற சந்தேகம் எழுகிறது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை கிரீன் சிக்னல் கொடுப்பாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்!












Click it and Unblock the Notifications