”தமிழ்நாடு குடிகார மாநிலம்.. மாற்றியது திமுக”.. சொல்கிறார் அண்ணாமலை - குடும்ப ஊழல் ஆட்சி என சாடல்
கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டை குடிகார மாநிலமாக திமுக மாற்றி இருப்பதாக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான தமிழகப் பள்ளிகளுக்கான மத்திய தணிக்கை அறிக்கையில், தமிழகத்தில் 11,711 வகுப்பறைகள் குறைவாக இருப்பதால், பள்ளிகள், மரத்தடிகளிலும், மேற்கூரை இல்லாத வெட்டவெளிகளிலும், ஆய்வுக் கூடங்களிலும் நடக்கிறது என்பது தெரிய வந்துள்ளது., 5 கிமீ தொலைவுக்கு ஒரு உயர் நிலைப் பள்ளி, 8 கிமீ தொலைவுக்கு ஒரு மேல் நிலைப் பள்ளி இருக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, 2,133 இடங்களில் உயர் நிலைப் பள்ளிகள், 1,926 இடங்களில் மேல்நிலைப் பள்ளிகள் இல்லை.

108 பள்ளிகளை ஆய்வு செய்ததில், 38 பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லை. அல்லது இடிந்த நிலையில் இருக்கிறது. இதுதான் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், PM Shri என்ற திட்டத்தை, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்தின்படி, இந்தியாவில் 14,500 பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 18,128 கோடி ரூபாய் நமது மத்திய அரசு செலவு செய்யவுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த அரசுப் பள்ளிகளை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். ஆந்திர பிரதேச மாநிலத்தில் 662 பள்ளிகள், கர்நாடகா மாநிலத்தில் 129 பள்ளிகள். தெலுங்கானா மாநிலத்தில் 543 பள்ளிகள் என அனைத்து மாநிலங்களும், தங்கள் மாநிலத்தின் குழந்தைகள் நலனுக்காக, PM Shri பள்ளிகள் ஒதுக்கீடு பெற்றுக் கொண்டனர். ஆனால் திமுக அரசு, மத்திய அரசிடம் ஒரு பள்ளிகளைக் கூடக் கேட்டுப் பெறவில்லை. தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளின் வருமானத்துக்காக, தமிழக ஏழை எளிய குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம், தொழிற்பேட்டை அமைக்கப்படும். அரசு பொறியியல் கல்லூரி, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தல், பாதாள சாக்கடை திட்டம் என திமுக கொடுத்த ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்கிறார் முதலமைச்சர்.
வரும் பாராளுமன்றத் தேர்தல், மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கும், குடும்ப அரசியலுக்கும் இடையேயான தேர்தல். நேர்மையான நல்லாட்சிக்கும், ஊழல் கட்சிக் கூட்டணிக்கும் இடையேயான தேர்தல். கல்வித் திட்டங்களைக் கொண்டு வந்து, நம் குழந்தைகளை முன்னேற்றும் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும், திரும்பும் இடம் எல்லாம் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து, தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றி வைத்திருக்கும் திமுக கூட்டணிக்கும் இடையேயான தேர்தல்.
உலகப் பொருளாதாரத்தில், 11 ஆவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றியிருக்கும் நமது அன்புக்குரிய பிரதமருக்கும், நாட்டிலேயே அதிகக் கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை மாற்றி வைத்திருக்கும் ஊழல் திமுக கூட்டணிக்கும் இடையேயான தேர்தல். நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். தேசத்தின் முன்னேற்றத்திற்குத் துணை நிற்போம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications