அண்ணாமலைப் பல்கலைகழகம் ஜோதிடவியல் பட்டமளிப்பு விழா
சென்னை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் ஜோதிடவியல் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை சப்தரிஷி ஜோதிட அறிவியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து ஜோதிடவியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பயிற்சி வகுப்புகள் மதுரை, அண்ணாமலை நகர், சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலில் நடைபெறுகின்றன.
கடந்த ஆண்டு தொலைதூரக் கல்வி மூலம் ஜோதிடவியல் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா சென்னையில் தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது
இந்த விழாவில் ஜோதிடப்பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன், திரு.கே.பெரியையா ஐ.பி.எஸ் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications