தனுஷை விடாமல் விரட்டும் கதிரேசன் - மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: நடிகர் தனுஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 Another complaint against actor Dhanush

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன்,மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான் என்றும், வயதாகிவிட்ட எங்களுக்கு அவர் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கில் உண்மை இல்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனுசின் அங்க அடையாளங்களை சரிபார்க்க உத்தரவிட்டனர். இதையடுத்து தனுஷ் அவரது அடையாளங்களை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என கதிரேசன் புகார் அளித்துள்ளார்.

நடிகர் தனுஷை விடாமல் விரட்டுகிறார் கதிரேசன். இதற்கு என்ன சொல்லப்போகிறார் தனுஷ்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kathiresan filed a police complaint against the actor on Monday in Madurai commissoner office, alleging that he had submitted forged documents in the court.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற