தெளிய விட்டு தெளிய விட்டு பலமாக அடிக்கும் மழை... பயத்தோடு பார்க்கும் சென்னைவாசிகள்
சென்னையில் சில மணிநேரங்கள் இடைவெளி விட்டிருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னையில் 2 மணிநேர இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஞாயிறு இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்றும் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக சென்னையில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையின் நகர் பகுதிகளிலும், புறநகரிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

வெளியேறிய மக்கள்
திங்கட்கிழமை முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. முடிச்சூர் பகுதி மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறினர். வரதராஜபுரத்தில் ஒருநாள் மழைக்கே படகு மூலம் மக்கள் மீட்கப்பட்டனர்.

விட்டு விட்டு மழை
செவ்வாய்கிழமையன்று சில மணிநேரங்கள் மழை நின்றது. வெயில் தலைகாட்டியது. இதனால் வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியதாக மக்கள் நினைத்தனர். ஆனால் நள்ளிரவில் மீண்டும் பலத்த மழை கொட்டியது.

தெளிய விட்டு அடிக்கும் மழை
பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பலரும் உறவினர் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் மழை கொட்டத் தொடங்கியுள்ளனர். விட்டு விட்டு பலத்த மழை பெய்வதால் 2015ஆம் ஆண்டு போல மீண்டும் ஒரு வெள்ளம் வருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்
இந்த நிலையில் மீண்டும் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது.
மழை பெய்வதால் பலரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். சென்னையின் பருவநிலையே குளிர்ச்சியாக மாறிவிட்டது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பலரும் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். வீட்டை விட்டு அலுவலகம் சென்றவர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications