திருப்பூர் அருகே சிக்கிய ரூ.570 கோடி விவகாரத்தில் மர்மம் நீடிப்பு! இந்த கேள்விகளுக்கு விடை எங்கே?
சென்னை: திருப்பூர் அருகே ரூ.570 கோடி பணத்தோடு 3 கன்டெய்னர் லாரிகள் பிடிபட்ட சம்பவத்தில் பெரும் மர்மம் நிலவிவருகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டம் அமலில் இருக்கும் இந்த நாட்டில், வங்கிப் பணம்தான் என்று அறிவிக்கப்பட்ட ஒரு பணப்போக்குவரத்து குறித்து பல நாட்கள் கடந்தும், மக்களுக்கு விடை தெரியாமல் இருப்பது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.
இப்போது, வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பணம் ஏன், கோவையில் இருந்து விசாகப்பட்டிணத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக எஸ்பிஐ வங்கி கூறுகிறது? இதில் விடை தெரியாத கேள்விகள் எவை என்பதை பார்க்கலாம்:

டீசல் இருந்துள்ளது
பணத்துடன் பிடிபட்ட லாரிகள், டீசல் போடுவதற்காக, சர்வீஸ் சாலையில் லாரிகள் சென்று கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று லாரிகளிலும் டேங்க் முழுவதும் டீசல் இருந்துள்ளது. பெருமாநல்லுார் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பப்பட்டது உறுதியாகியுள்ளது.

பிடிக்க ஏன் தாமதம்
மூன்று லாரிகளும், தேர்தல் அதிகாரிகளால், 7 கிலோ மீட்டர் துாரம் துரத்தி செல்லப்பட்ட போது, மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில்தான் சென்றுள்ளதாக தெரிகிறது. அப்படியும், தேர்தல் அதிகாரிகளால் ஏன் உடனடியாக அவற்றை நிறுத்த முடியவில்லை?

மரப்பெட்டியில் பணம்
மூன்று லாரிகளிலும் மொத்தம், 195 மரப்பெட்டிகளில் பணம் இருந்ததுள்ளது. தீ விபத்தில் இருந்து பணத்தை காக்கும் நோக்கத்திற்காக, விதிமுறைகளின்படி, இரும்பு பெட்டிகளில்தான் பணம் எடுத்துச்செல்லப்பட வேண்டும். தீயணைப்பு கருவியும் வாகனத்தில் இருக்க வேண்டும். ஆனால், மரப்பெட்டியும், தீயணைப்பு கருவிகள் இல்லாததும், சந்தேகத்தை அதிகரித்துள்ளன.

கார்கள் யாருடையது
மொத்தம், மூன்று லாரிகள் மற்றும், மூன்று இன்னோவா கார்கள் பிடிப்பட்டன. மூன்று லாரிகள் பற்றிய தகவல்கள் தான் வெளி வருகின்றன. மூன்று இன்னோவா கார்களில், இரண்டு மட்டும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. மூன்றாவது எங்கே என தகவல் தெரிவிக்கப்படுவதில்லை.

அனுமதி பெறாதது ஏன்?
பணம் எடுத்து செல்வது பற்றி கோவை போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படாமல் இருந்தது ஏன்? தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே அனுமதி பெறாதது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

எஸ்கேப் ஆவது ஏன்?
பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தேர்தல் ஆணையமும், ரிசர்வ் வங்கியும் நேரிடையாக எந்த பதிலும் கூறாமல், வருமான வரி அதிகாரிகளை மட்டும் கை காட்டுவது ஏன்?

18 மணி நேர தாமதம் ஏன்?
இந்த பணம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு உரியது என்றாலும், அதற்கான உரிமையை கோர, 18 மணி நேரம் ஆனது ஏன்? இவ்வளவு பெரிய அளவுக்கு பணம் பிடிபட்டுள்ளபோதிலும், ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால், அரசு வங்கி அதிகாரிகளிடம் தாமதம் ஏற்பட்டது என்று காரணம் கூறுவதை ஏற்க முடியவில்லை.
கோவையில் இருந்து ஏன்?
கோவையிலிருந்து இவ்வளவு அதிகமான ரொக்கம், ஆந்திராவிற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. விசாகப்பட்டினம் ஸ்டேட் வங்கி கிளைக்கு ரொக்கம் தேவைப்பட்டால், அந்த மாநிலத்தில் உள்ள, அந்த வங்கியின் பண காப்பத்தை தான் நாட வேண்டும். அப்படியே தேவை என்றாலும், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைப்படி, கோவையில் சேமிக்கப்பட்ட, 570 கோடி ரூபாய் ரொக்கத்தை, சென்னை ரிசர்வ் வங்கியின் பண பாதுகாப்பு மையத்துக்குத் தான் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஏன் கோவையில் இருந்து பணம் கொண்டு செல்லப்பட்டது?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications