ரூ1,200 கோடி அன்னியச் செலாவணி முறைகேடு... இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
சென்னை: இஸ்ரோவின் துணை நிறுவனமான ஆன்ட்ரிக்ஸுக்கு ரூ1200 கோடி அன்னிய செலாவணி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவின் துணை நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ், தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியாவுக்கு விதிகளை மீறி குறைந்த விலையில் எஸ்-பாண்ட் அலைவரிசைகளை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் அன்னியச் செலாவணி முறைகேடுகளும் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த 2012-ஆம் ஆண்டு அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழும், கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. 3 ஆண்டு விசாரணைக்குப் பிறகு இந்த விவகாரத்தில் ரூ.1,217.76 கோடி அளவுக்கு அன்னியச் செலாவணி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கண்டறித்துள்ள அமலாக்கத்துறை ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் மூலம் தேவாஸ் மல்டிமீடியா முறைகேடாகப் பணம் ஈட்டியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் உள்ள தென்பிராந்திய அமலாக்கத்துறை சிறப்பு இயக்குநர், தேவாஸ் மல்டிமீடியா உள்ளிட்ட இதில் தொடர்புடைய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வழக்கில் அன்னியச் செலாவணி முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.1,217.76 கோடியைப் போல மூன்று மடங்கு தொகை இந்த நிறுவனங்களுக்கு அபராதமாக விதிக்கப்படவாய்ப்பு உள்ளது.
பெங்களூரில் இருந்து செயல்படும் தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் மொரீஷியஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து செயல்படும் நிறுவனங்களிடம் இருந்து 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ரூ.578.54 கோடியை அன்னிய நேரடி முதலீடாகப் பெற்றுள்ளது. இதில் அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டமும், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய விதிகளும் பல்வேறு நிலைகளில் மீறப்பட்டுள்ளன. இது தவிர முதலீடு செய்த அன்னிய நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் முன்னுரிமை அடிப்படையில் 8% பங்கு ஈவுத்தொகை அளிப்பதாகவும், இது தவிர வழக்கமான ஈவுத்தொகை மற்றும் வருவாய்ப் பகிர்வை அளிப்பதாகவும் தேவாஸ் நிறுவனம் கூறியுள்ளது.
அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தில் இதுபோன்ற நடைமுறைகளுக்கு வழியில்லை. எனினும், இவ்வாறு வாக்குறுதி அளித்து ரூ.571.72 கோடியை அன்னிய முதலீடாக தேவாஸ் மல்டிமீடியா பெற்றுள்ளது என்று அமலாக்கத்துறை நோட்டீஸில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இஸ்ரோ நிறுவனம் அனுப்பும் செயற்கைக்கோள்களில் இருந்து பெறப்படும் அலைவரிசைகள் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். இந்த அலைவரிசைகளை வர்த்தக ரீதியாக விற்பனை செய்ய அமைக்கப்பட்டதுதான் இஸ்ரோவின் துணை நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ்.
இந்த நிறுவனம் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றுக்கு அதிக விலைக்கு அலைவரிசைகளை ஒதுக்கியது. அதே நேரத்தில் தனியார் நிறுவனமான தேவாஸுக்கு குறைந்த விலையில் அலைவரிசை ஒதுக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications