யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆனால் எல்லோரும் எம்ஜிஆராக முடியாது.. சொல்கிறார் தம்பிதுரை!
யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் ஆனால் எல்லோரும் எம்ஜிஆராக முடியாது என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் ஆனால் எல்லோரும் எம்ஜிஆராக முடியாது என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளனர். இதற்கு மற்ற அரசியல் கட்சிகளிடையே எதிர்ப்பும் வரவேற்பும் ஒருசேர கிளம்பியுள்ளது.
இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

எம்ஜிஆர் ஆக முடியாது
அப்போது ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்ற அவர், அதற்கு தடை கிடையாது என கூறினார். ஆனால் கட்சி ஆரம்பிக்கும் எல்லாரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்றும் தம்பிதுரை கூறினார்.

சீர்திருத்த பணியை மேற்கொண்டார்
எம்.ஜி.ஆர் 1953ஆம் ஆண்டு தி.மு.க.,வில் இணைந்த போது, தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறிய தம்பிதுரை சமூக சீர்திருத்த பணியை தான் செய்தார் என்றார். 1956ஆம் ஆண்டுதான் எம்ஜிஆர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார் என்றும் தம்பிதுரை கூறினார்.

எம்ஜிஆர் கொள்கை, ஜெ. ஆட்சி
சமூக நீதிக்காக வாழ்ந்தவர் எம்ஜிஆர் என்ற தம்பிதுரை, தற்போது அரசியலுக்கு வருவோர், எதற்காக வருகின்றனர் என தெரியவில்லை என்றும் சாடினார். எம்ஜிஆரின் கொள்கையையும் ஜெயலலிதாவின் ஆட்சியையும் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும தம்பிதுரை கூறினார்.

அதிமுகவுடன் போட்டியிட
அதிமுக ஆட்சி தான் நீடிக்கும் என்ற அவர், நான் யாரையும் குறை சொல்ல தயாராக இல்லை என்றும் கூறினார். அதிமுகவுடன் போட்டியிட, எந்த தேசிய கட்சிகளும் கிடையாது என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.

நோட்டாவுடன் தான் போட்டி
தேசிய கட்சிகள் 'நோட்டா'வுடன் தான் போட்டியிடுகின்றன என்றும் தம்பிதுரை கூறினார். தமிழகத்தில், திராவிட இயக்கங்கள்- தேசிய கட்சிகள் இடையே, என்றைக்குமே போட்டி கிடையாது என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் இடம் கிடையாது
தேசிய கட்சியான காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்ட முதல் மாநிலம், தமிழகம் தான் என்ற தம்பிதுரை திராவிட பாரம்பரியத்தை யாரும் அழித்துவிட முடியாது என்றார். தேசிய கட்சிகளுக்கு, தமிழகத்தில் இடம் கிடையாது என்றும் தம்பிதுரை கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications