மெட்ரோ.. ஏர்போர்ட்டை விடுங்க.. ஓசூருக்கு அடித்த ஜாக்பாட்.. அடுத்தடுத்து குவியும் குட்நியூஸ்!
ஓசூர்: ஓசூருக்கு வழங்கப்படும் ரயில் சேவைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 2 வருடங்களாக முதலீடுகள் அதிகமாக தமிழ்நாடு பக்கம் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அழைப்புகளை விடுத்து வருவதால் பல்வேறு முதலீடுகள் தமிழ்நாடு பக்கம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக பெங்களூர் எல்லையில் இருக்கும் ஓசூரில் முதலீடுகள் குவியும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் இருந்து வருகிறது.

விமான நிலையம்: முக்கியமாக கிருஷ்ணகிரியில் உள்ள ஓசூரில் வேகமாக தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. பெங்களூருக்கு அருகிலேயே இருப்பதால் பெங்களூரில் இருந்து பல ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஓசூர் நோக்கி நகர்ந்து வருகின்றன. ஓசூருக்கு பல நிறுவனங்கள் வரும் நிலையில் இங்கு உள்நாட்டு விமான நிலையம் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல நாட்களாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வருவதால் விமான நிலையத்திற்கான தேவை அதிகம் ஆகியுள்ளது. இது ஓசூர் இன்னும் வேகமாக வளரவும் வழி வகுக்கும். இதற்கான டெண்டர் பணிகள் நடந்து கொண்டு இருப்பதாக முன்பே தகவல்கள் வெளியாகின.
மெட்ரோ: விமான நிலையம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் மெட்ரோ அமைக்கும் பணிகளும் நடக்க உள்ளன. ஓசூர் - பெங்களூர் மெட்ரோவை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளாத நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு ஓசூரில் மெட்ரோ அமைப்பதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.
இதற்கான முக்கியமான டெண்டர் நேற்று விடப்பட்டு கையெழுத்தானது. பாலாஜி ரெயில்ரோடு சிஸ்டம்ஸ் - சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது (BARSYL) - பெங்களூரின் பொம்மசந்திரா மற்றும் தமிழ்நாட்டில் ஓசூர் இடையே மெட்ரோ போக்குவரத்து பாதையை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (DFR) தயாரிப்பதற்கான குறைந்த ஏலத்தில் கையெழுத்திட்டது.
பெங்களூரு, கர்நாடகாவில் உள்ள பொம்மசந்திரா மற்றும் தமிழ்நாட்டின் ஓசூர் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் பாதையை அமைக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (டிஎஃப்ஆர்) தயாரிப்பதற்காக 11 நிறுவனங்கள் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) நிறுவனத்திடம் ஏலம் சமர்ப்பித்துள்ளன.
இதில்தான் பாலாஜி ரெயில்ரோடு சிஸ்டம்ஸ் - சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது (BARSYL) - பெங்களூரின் பொம்மசந்திரா மற்றும் தமிழ்நாட்டில் ஓசூர் இடையே மெட்ரோ போக்குவரத்து பாதையை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (DFR) தயாரிப்பதற்காக தேர்வாகி உள்ளது. NH-44 இல் சுமார் 18 கிமீ நீளமுள்ள இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பாதை அட்டிபெல்லே வழியாக செல்லும். இதில் 11.5 கிமீ பாதை கர்நாடகாவில் அமைந்துள்ளது மற்றும் மீதமுள்ள 6.5 கிமீ தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
ரயில்வேயில் மாற்றம்: இப்படி மெட்ரோ, விமானம் நிலையங்கள் ஒரு பக்கம் இருக்க , ஓசூருக்கு வழங்கப்படும் ரயில் சேவைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
ஓசூருக்கு ரயில்வே மேம்பாடு பின்வரும் 5 கட்டங்களாக செய்யப்படுகின்றன.

1. அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஒரு மல்டி மாடல் சரக்கு முனையத்தை அமைக்க முடிவு செய்துள்ளனர்.
2. ஓசூர்-ஓமலூர் சேலம் கோட்ட இரட்டிப்புக்கான டிபிஆர் தயாரிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
3. பெங்களூருக்கு விரைவில் கூடுதல் ரயில்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. ஓசூர்-ஜோலார்பேட்டை வழித்தடத்திற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
5. ஓசூர் - சென்னை இடையிலான போக்குவரத்தை அதிகரிக்க கூடுதல் ரயில்களை விட முடிவு செய்துள்ளனர்;.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications