ஓராண்டுக்கு பிறகு உப்பு சப்பில்லாத காரணங்களை கூறி உண்மையை வெளியிடும் அப்பல்லோ...
ஜெயலலிதா இறந்து ஓராண்டுக்கு பிறகு அவரது உண்மை நிலையை மறைத்தது ஏன் என்று உப்பு சப்பில்லாத சில காரணங்களை அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளது.
Recommended Video

சென்னை: அப்பல்லோவில் அனுமதிக்கப்படும்போது ஜெயலலிதா ஆபத்தான நிலையில் இருந்தார் என்ற உண்மையை ஓராண்டுக்கு பின்னர் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதை மறைத்தது ஏன் என்ற கேள்விக்கு உப்பு சப்பில்லாத காரணங்களை தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா இறந்து ஓராண்டு ஆவதற்கு சில நாள்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு ஏற்படுத்தியது. தற்போது அந்த கமிஷன் அரசு மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்களை விசாரணைக்கு அழைத்து வருகிறது.
இதனிடையே ஜெயலலிதா தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான நிலையில்தான் அனுமதிக்கப்பட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா நன்றாக இருக்கிறார், விரும்பும்போது வீடு திரும்பலாம் என்று கூறிய பிரதாப் ரெட்டி கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின்னர் இதுபோல் அவர் பல்டி அடித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உப்பு சப்பில்லாத காரணம்
ஜெயலலிதாவுக்கு என்னவாயிற்றோ ஏதாயிற்றோ என்று பதறியடித்தபடி மருத்துவமனையில் காத்திருந்த மக்களுக்கு ஜெயலலிதாவின் உண்மை நிலையை மறைத்து காய்ச்சல் என்று மட்டும் கூறியது ஏன் என்று கேள்விக்கு பிரதாப் ரெட்டி உப்பு சப்பில்லாத காரணத்தை கூறியுள்ளார்.

மக்கள் அச்சப்படுவர்
சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக் கூடாது என்பதற்காகவும் மக்கள் அச்சப்படுவர் என்பதற்காகவும்தான் உண்மை நிலையை மறைத்து வெறும் காய்ச்சல் என்று அறிக்கை வெளியிட்டோம் என்று பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். உண்மையை கூறுவதால் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்துவிட போகிறது. இதற்கு முன்னர் இதுபோல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டபோது அவர்களின் உண்மை நிலை மக்களுக்கு அறிவிக்கப்பட்டது, அப்போதும்கூட எந்த பிரச்சினையும் வரவில்லை.

சட்டம் ஒழுங்கை பராமரித்த...
இவ்வளவு ஏன் 75 நாள்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென உயிரிழந்தபோது முதல் அவரது உடல் நல்லடக்கம் செய்யும் வரை சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. அவ்வாறிருக்க உண்மை நிலையை கூறுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறுவது சந்தேகத்தை எழுப்புகிறது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை வருமா
மக்களிடம் கூறினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும். ஏன் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள், ஆளுநர் ஆகியோரிடம் இதை கூறியிருந்திருக்கலாமே. அவர்களிடமும் காய்ச்சல் புராணத்தை பாடிவிட்டு தற்போது மாற்றி பேசுவது எந்த விதத்தில் உண்மையாக இருக்கும்? சட்டம் ஒழுங்கை காக்க போலீஸ் இருக்கிறது, அந்த துறை பார்த்துக் கொள்ள போகிறது, இவர்களுக்கென்ன அக்கறை.

பிரச்சினை இல்லை
ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன என்பதை விசாரணைக்கு பயந்து இப்போது கூறுவதை காட்டிலும் அப்போதே கூறியிருந்தால் மக்களும் ஜெயலலிதா மருத்துவமனைக்கு வந்த நிலை, அளிக்கப்பட்ட சிகிச்சை ஆகியவற்றை வைத்து அவருக்காக 2 சொட்டி கண்ணீர் விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்த்திருப்பர்.

முழுவதும் மூடி மறைத்துவிட்டு
ஆனால் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட்டதால் காய்ச்சல் என்றுதானே சொன்னார்கள், திடீரென ஜெயலலிதா இறந்துவிட்டாரே என்ற குழப்பம் ஏற்பட்டுவிட்டது. மேலும் உண்மையை சொல்லியிருந்தால் தேவையற்ற குழப்பங்கள், வாக்குவாதங்கள், விசாரணை ஆணையம் இவையெல்லாம் அமையாமல் இருந்திருக்கும். ஜெயலலிதா மறைந்தவுடன் அப்பல்லோ நிர்வாகம் ஏற்பாடு செய்த பிரஸ் மீட்டிங்கில் கூட பிரதாப் ரெட்டி பங்கேற்காமல் குடும்ப விழாவில் கலந்து கொண்டார். லண்டனில் இருந்து வந்த பீலே செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் மக்கள் மனதில் அழிக்க முடியாத சந்தேகத்தை ஏற்படுத்த காரணமாக இருந்து விட்டு இப்போது உப்பு சப்பில்லாத காரணங்களை கூறி தங்கள் மீதான பழியை கட்டி கழித்துக் கொண்டால் எப்படி என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications