ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக நான்தான் காரணம்.. சு.சுவாமி ஜம்பம் #jayalalithaa
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்த பொறுப்புகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளதற்கு, தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கைதான் காரணம் என்று, ராஜ்யசபா பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருப்பதால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், எனவே, தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கடந்த வாரம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கடிதம் எழுதிியருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவிடமிருந்த பொறுப்புகள் அனைத்தும், மூத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் வழங்கப்படுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று அறிவித்தார். முன்னதாக பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய மூத்த அமைச்சர்களிடம், ஆளுநர் ஆலோசனை நடத்தியிருந்தார்.
Appointment of Paneer as chairman of the Cabinet was triggered by my demand for President's Rule. It led to Governor summoning Ministers.
— Subramanian Swamy (@Swamy39) October 12, 2016
இதுகுறித்து, சுப்பிரமணியன் சுவாமி இன்று வெளியிட்டுள்ள டிவிட்டில், அமைச்சரவையின் தலைவராக பன்னீர்செல்வத்தை நியமிக்க குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த நான் விடுத்த கோரிக்கையே காரணம். இதன்பிறகுதான் அமைச்சர்களுடன், ஆளுநர் ஆலோசனை நடத்தினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications