அரபிக் கடலில் புயல் சின்னம்... ஆனால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை – வானிலை மையம்
சென்னை: அரபிக் கடலில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடையின் உச்சகட்டமான "அக்னி நட்சத்திரம்" கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை கொளுத்தியது. வெயிலின் தாக்கம் அதிகமாகைருந்த காரணத்தினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

தமிழகத்தில் "அக்னி நட்சத்திரம்" நிறைவடைந்த போதிலும் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இன்று பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
எனினும், அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம், வளைகுடா நோக்கி நகர்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தற்போது அரபிக் கடலையொட்டியுள்ள கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கேரளாவையொட்டியுள்ள நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை காணப்படுகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications