ஒரு மாணவி மட்டும் கடைசி நிமிடத்தில் கிணற்றில் குதிக்காமல் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்கள்
Recommended Video

வேலூர்: அரக்கோணம் அருகே உள்ள பணப்பாக்கம் அரசுப்பள்ளியில் படித்து வந்த மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி ஆகியோர் நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
மாணவிகள் நான்கு பேர் கூட்டாக தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், மாணவிகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று பணப்பாக்கத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்துவருகிறது.
பதற்றமான சூழ்நிலையால் அந்தப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் திட்டியதால்
மாணவிகள் மரணத்திற்கான காரணம் குறித்த, முதற்கட்ட விசாரணையில் மாணவிகள் ஏன் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த பருவத் தேர்வுகளில் மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி உள்ளிட்ட சில 11ம் வகுப்பு மாணவிகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து வரச் சொல்லி திட்டி இருக்கிறார்கள்.

மனமுடைந்த மாணவிகள்
ஆனால், மாணவிகள் பள்ளிக்கு பெற்றோர்களை அழைத்து வராததால், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமாமணி உள்ளிட்ட ஆசிரியர்கள் சிலர் மாணவிகளை மற்ற மாணவர்கள் முன் திட்டி, வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்ததாகத் தெரிகிறது. மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதால் மனமுடைந்த மாணவிகள் மோனிஷா, ரேவதி,தீபா, சங்கரி உள்ளிட்ட ஆறு பேர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

ஐந்து பேர் திட்டம்
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், தற்கொலை செய்யப்போனது 4 மாணவிகள் மட்டும் கிடையாதாம். ஐந்தாவதாக ஒரு மாணவியும் அதில் இருந்துள்ளார். ஆனால் தற்கொலை செய்ய தைரியமின்றி 5 பேரும் வெகுநேரம் கிணற்றுக்கு அருகே இருந்து பேசியபடி இருந்துள்ளனர். ஒருவருக்கொருவர் மனரீதியாக தயாரான பிறகே கிணற்றில் குதிக்கப்போயுள்ளனர்.

ஒரு மாணவி தப்பினார்
இப்படி ஐந்து பேரும் கைகோர்த்துக் கொண்டு, குதிக்கப்போன நேரத்தில் ஒரு மாணவி மட்டும் பயத்தில் ஓடிவந்துவிட்டார். மற்ற 4 மாணவிகளும் குதித்துவிட்டனர். பள்ளிக்கு சென்ற மாணவி உடனடியாக அதுகுறித்து ஆசிரியர்களிடம் சொல்லவில்லை. உடம்பு சரியில்லை என்று காரணம் கூறிவிட்டு அமைதியாக இருந்துள்ளார். ஆனால் ஆசிரியர்கள் சந்தேகப்பட்டு துருவி துருவி கேட்டபோது உண்மையை சொல்லியுள்ளார்.

காப்பாற்ற வாய்ப்பு
இதன்பிறகே கிணற்று பகுதிக்கு ஆசிரியர்கள் விரைந்துள்ளனர். ஒருவேளை அந்த மாணவி சற்று முன்னதாக தகவல் கொடுத்திருந்தால், 4 மாணவிகளை காப்பாற்ற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications