ஜோலார்பேட்டை மக்களுக்கு "டபுள் குஷி".. 10ம் தேதி நடக்க போகும் மாற்றம்.. திகைத்த திருப்பத்தூர்.. வாவ்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்துக்கு நல்ல செய்தியை, ரயில்வே அறிவித்துள்ளது.. ஏற்கனவே வந்தே பாரத் செய்தி வலம்வந்தபடியே உள்ள நிலையில், இந்த கூடுதல் தகவலும் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.

மோடியின் கனவு திட்டம்: தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் இருந்தாலும் வந்தே பாரத் அதிவேகத்தில் இயக்கப்படும் என்ற அறிவிப்புதான் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்தவகையில், அரக்கோணம், ஜோலார்பேட்டை நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், வந்தே பாரத் ரயிலும் அரக்கோணம் வழியாக இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டன.
அதாவது, இதுவரை பயணிகள் இந்த ரயிலில் அமர்ந்து மட்டும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தது. இப்போது, வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதிகள் கொண்டதாகவும், மின்சார ரயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக, வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணிகளும் ரயில்வே துறை சார்பில் துரிதமாகியும் வருகிறதாம்..
ஜோலார்பேட்டை: இதுஒருபக்கம் இருந்தாலும், மற்றொரு மகிழ்ச்சி அறிவிப்பு வெளியாகி உள்ளது.. கர்நாடகா மாநிலம் மைசூரு இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயிலானது, ஜோலார்பேட்டையில் நிறுத்துவதில்லை. முக்கிய வழித்தடமான ஜோலார்பேட்டையில், ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று பயணிகள் நீண்டகாலமாகவே, தொடர்ந்து வலியுறுத்தபடியே இருந்தனர்.. இதற்குதான் தற்போது ரெயில்வே வாரியம் ஒப்புதல் தந்துள்ளது.
வரும் ஜூலை 9ம் தேதி முதல் சதாப்தி ரயில், இரு மார்க்கங்களிலும் தலா ஒரு நிமிடம் நின்று செல்லுமாம். இதுகுறித்த அறிவிப்பில்,
"சதாப்தி விரைவு ரெயில் (வ.எண். 12027) ஜோலார்பேட்டையில் இரவு 8.14 மணிக்கு நின்று செல்லும். மறுமார்க்கமாக கே.எஸ்.ஆர். பெங்களூரு-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சதாப்தி விரைவு ரெயில் (வ.எண். 12028) ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் காலை 7.49 மணிக்கு நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டபுள் மகிழ்ச்சி: அதுமட்டுமல்ல, இந்த வசதி வருகிற 10-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஜோலார்பேட்டையில் சதாப்தி விரைவு ரெயில் நின்று செல்லும் வசதியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வருகிற 9-ந்தேதி தொடங்கி வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம், ஜோலார்பேட்டை நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், சதாப்தி ரயில் குறித்த அறிவிப்பும் வெளியாகி, இரட்டிப்பு மகிழ்ச்சியை பயணிகளுக்கு தந்து வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications