அரக்கோணம் கடற்படை விமான தளம் தற்காலிக பயணிகள் விமான நிலையமாகிறது
சென்னை: கனமழையினால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் அரக்கோணத்தில் உள்ள மத்திய அரசின் ராஜாளி கடற்படை விமான தளம் தற்காலிகமாக பயணிகள் விமான நிலையமாக மாறுகிறது.
வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் மத்திய கடற்படையின் பயிற்சித் தளம் உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய கடற்படைத்தளமான இங்கு, இந்தியாவிலேயே மிகப் பெரிய ஹெலிகாப்டர் விமானிகள் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.

தற்போது சென்னையில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கன மழையால் சென்னை விமான நிலைய ஓடு பாதையிலும் தண்ணீர் வெள்ளமாக தேங்கியுள்ளது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விமான நிலையம் நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்திற்கு தரை இறங்குவதற்காக வந்த 15 விமானங்கள் தரை இறங்க முடியாமல் ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களுக்கு திருப்பிடப்பட்டன. மேலும் விமான நிலையத்திற்குள் விமானம் நிறுத்தப்படும் இடங்களிலும் ஓடு பாதையிலும் வெள்ளமாக தேங்கியிருந்த மழை நீரால் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் சென்னையில் 48 மணிநேரத்துக்கும் மேலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையம் சரி செய்யப்படும் வரை பயணிகளின் நலன் கருதி அரக்கோணம் கடற்படை விமான தளத்தை தற்காலிகமாக பயணிகள் விமான நிலையமாக மாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு மாற்றினால் குறைந்த பட்ச விமான பயணிகளாவது சிரமம் இன்றி வெளியூர் செல்ல வசதியாக இருக்கும்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications