Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரணி மஞ்சுளா, ஈரோட்டில் மைதிலி, இப்ப செங்கல்பட்டு சுதா! பட்டா மாறுதலில் பெண் அரசு அதிகாரிகளே இப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவு, வருவாய்த்துறைகளில் நாளுக்கு நாள் லஞ்ச புகார்கள் எழுந்து வரும்நிலையில், அவைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மிக தீவிரமாக எடுத்து வருகிறது தமிழக அரசு.. தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்களது குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், தயவு தாட்சண்யம் இல்லாமல், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகிறது. இந்நிலையில், வருவாய்த்துறையில் அதிக லஞ்ச புகார்கள் உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 10 வருடங்களில் அதிகமாக லஞ்சம் வாங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.. 2023-24ல் 155 பேர் லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள்.. அந்த வழக்குகளை போலீசார் விசாரித்து வருவதாகவும், 2023-24ல் லஞ்சம் வாங்கியதாக வருவாய்த்துறையினர் மீதுதான் அதிகபட்மாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

Arani erode Patta change

அதாவது, வருவாய்த்துறைக்கு அடுத்ததாக, மின்சார வாரியம் மீது 26 வழக்குகள், ஊரக வளர்ச்சித்துறை - 22, உள்ளாட்சி அமைப்புகள் - 21 வழக்குகள், சர்வே - 18, போலீஸ் - 10, பத்திரப்பதிவு - 8, சமூகநலத்துறை - 4 வணிகவரித்துறை, கூட்டுறவு, வேளாண், கல்வித் துறைகளில் தலா 1, மருத்துவத்துறை - 2, தொழிலாளர் நலத்துறை - 3 வழக்குகள் குறித்து விசாரணை நடப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

சேவை விதிகள்

அதற்கேற்றபடி தினந்தோறும் யாராவது அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதாகி கொண்டேயிருக்கிறார்கள்.. உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, நீர்வளம், நெடுஞ்சாலை, மின்சார வாரியம், காவல்துறை, தீயணைப்பு என பல்வேறு துறைகளில் லஞ்ச புகார்கள் கிளம்பியிருக்கின்றன. இவைகள் அனைத்திலுமே டாப்பில் உள்ளன.. வருவாய்த்துறை பதிவுத்துறைதான்.

அதிகாரிகள் சேவை விதிகளை மீறினால், நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படும் என வருவாய்த்துறை தரப்பில் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் இந்த போக்கு தொடர்கிறது. அதிலும் சில பெண் அதிகாரிகளும் கைதாவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் உண்டுபண்ணி வருகிறது.

பட்டா மாறுதல் - லஞ்சம்

பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கி நாகை விஏஓ செல்வி என்பவர் சில மாதம் முன்பு கைது செய்யப்பட்டார். ஆரணியில் வட்டாட்சியர் மஞ்சுளா என்பவரும் லஞ்சம் வாங்கி கைதானார்.. இப்படி வார வாரம் பெண் அதிகாரிகள் கைதாகி வருகிறார்கள்.. கடந்த 3 நாட்களில் 3 பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதாகி உள்ளனர்.

அதாவது, தென்காசியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சப்பணத்தை பெற்றிருக்கிறார்.. அதிலும் கொய்யாப்பழங்களுக்கு நடுவில் வைத்து தரப்பட்ட பணத்தை பெற்றுள்ளார்.. மதுரையிலும் நேற்று முன்தினம் பெண் ஊழியர் பாக்கியலட்சுமி கைதானார். இதோ இப்போதும் செங்கல்பட்டு விஏஓ கைதாகியிருக்கிறார்.

செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அமித்குமார். இவர் தன்னுடைய பூர்வீக சொத்தை பட்டா பெயர் மாற்றத்திற்காக ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். பட்டா மாற்றம் செய்ய விஏஓ சுதா அணுகியபோது, அமித்குமாரிடம் 8,000 ரூபாய் ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

தொடர்ந்து கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த அமித்குமார் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய 8,000 ரூபாய் நோட்டுகளை அமித்குமார் விஏஓ சுதாவிடம் வழங்கும்போது அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுதாவை கையும் களவுமாக பிடித்தனர்.. தற்போது சுதாவிடம் விசாரணை நடக்கிறது.

பெரும்பாலான பெண் விஏஓக்கள் பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் வாங்கிதான் கைதாகி வருகிறார்கள்.. பொதுவெளியிலேயே லஞ்சம் வாங்கி பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவதை, அந்தந்த பகுதி மக்களே கண்டு அதிர்ச்சியும், கவலையும் அடைந்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+