For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்ஸ்டாவில் போலி போட்டோ.. 100 பெண்களுக்கு வலை.. முக்கால்வாசி பேர் திருமணமான பெண்களாம்! இளைஞர் கைது

Google Oneindia Tamil News

ஆரணி: இன்ஸ்டாகிராம் கணக்கில் வேறு ஒருவரின் இமேஜை டிபியாக வைத்து 100 பெண்களிடம் காதல் வலை வீசி பணம் பறித்த புகாரில் ஆரணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    இன்ஸ்டாவில் போலி போட்டோ.. 100 பெண்களுக்கு வலை.. முக்கால்வாசி பேர் திருமணமான பெண்களாம்! இளைஞர் கைது

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் பயாஸ் (24). திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் ஆரணியை அடுத்த பையூரை சேர்ந்த பாலாஜி என்பவரின் புகைப்படத்தை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். அதன் வழியாக பல பெண்களிடம் பேசி வந்தது தெரிகிறது.

    வீட்ட அபகரிச்சுட்டு மிரட்டுறாங்க சார்! தூத்துக்குடி பாஜக நிர்வாகி மீது பெண் பரபரப்பு புகார் வீட்ட அபகரிச்சுட்டு மிரட்டுறாங்க சார்! தூத்துக்குடி பாஜக நிர்வாகி மீது பெண் பரபரப்பு புகார்

    பாலாஜிக்கு தகவல்

    பாலாஜிக்கு தகவல்

    இந்த விவகாரம் குறித்து பாலாஜியின் நண்பருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் பாலாஜியிடம் இன்ஸ்டாகிராமில் அவரது புகைப்படம் கொண்ட ஒரு கணக்கு இருப்பதை சொன்னார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி, பயாஸிடம் பெண் குரலில் பேசி அவரை ஆரணி பேருந்து நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். இதையேற்று பயாஸும் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது பயாஸிடம் பாலாஜி, எனது புகைப்படத்தை உங்கள் ஐடியில் தவறாக பயன்படுத்தி வருகிறீர்கள்.

    சிக்கல்

    சிக்கல்

    இதனால் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே அந்த கணக்கை டெலிட் செய்து விடுமாறு கூறியுள்ளார். ஆனால் இதற்கு பயாஸ் மறுத்துவிட்டு பாலாஜியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலாஜி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் பயாஸை கைது செய்தனர்.

    செல்போன் ஆய்வு

    செல்போன் ஆய்வு

    அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100 க்கும் மேற்பட்ட திருமணமான மற்றும் இளம் பெண்களிடம் காதல் வார்த்தைகளை வீசி பண மோசடியிலும் பயாஸ் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த 100 பேரில் 75 சதவீதம் திருமணமானவர்கள் என சொல்லப்படுகிறது. அவர்களிடம் காதல் செய்து ஏமாற்றுவதுதான் பாதுகாப்பு என்பதை பயாஸ் நன்கு அறிந்தே இந்த வேலையை செய்துள்ளதாக தெரிகிறது.

    100 பெண்களுடன் சாட்டிங்

    100 பெண்களுடன் சாட்டிங்

    இதையடுத்து பயாஸ் அனுப்பிய இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது. 4 பிரிவுகளின் கீழ் பயாஸ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் போளூர் கிளை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் 100 பெண்களிடம் காதல் வலையுடன் பயாஸ் நின்றாரா இல்லை பாலியல் அத்துமீறல்களிலும் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Arani youth arrested for cheating money from 100 more women in the name of love in Instagram account.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X