"கேவலமா" இருக்கு.. "கலைஞரை" திட்டினவங்களுக்கெல்லாம் திமுகவில் பதவி? ஸ்டாலினிடமே "இவர்" கேட்டுட்டாரே?
சென்னை: ஸ்ட்டிரைட்டாக முதல்வர் ஸ்டாலினுக்கே, ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார் மூத்த தலைவர் கேஎஸ் ராதாகிருஷ்ணன்.. அதில் தன்னுடைய ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்துள்ளார்.. என்ன நடக்கிறது திமுகவில்?
பட்டிமன்ற பேச்சாளராக அறிமுகமாகி, பிறகு பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் திண்டுக்கல் ஐ.லியோனி... திமுகவின் நீண்டகால அபிமானியாகவும் திகழ்ந்து வருபவர்.. பல விழிப்புணர்வு கருத்துக்களையும், பகுத்தறிவு கருத்துக்களையும் பரப்பக்கூடியவர்.
சர்ச்சை லியோனி: இதன் காரணமாக மறைந்த முதல்வர் கருணாநிதியின் கவனத்தை ஈர்த்து திமுக கட்சிக்கு அழைக்கப்பட்டார். அதன்படியே, தன்னை திமுகவிலும் இணைத்துக் கொண்டார்.
இப்போது தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராகவும் உள்ளார்.. மற்றொருபக்கம், மேடைகளில் அனல்கக்கும் பேச்சுக்களையும் விடாமல் எழுப்பி வருகிறார்.. இவரது மேடைப்பேச்சுகளில், பாஜகவை நேரடியாகவே விமர்சித்தும், கிண்டலடித்தும் வருவது, இணையத்தில் பரபரப்பை கிளப்பிவிடும்.. இதனால், பாஜக தரப்பிலும், இந்து மத உணர்வாளர்கள் தரப்பிலும், ஏகப்பட்ட புகார்கள் இவர் மீது போலீசில் தரப்பட்டுள்ளது.. அந்த புகார்களில், லியோனியை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் தவறாமல் வலியுறுத்தப்பட்டும் வருகிறது.

லியோனிக்கு ஃபைன்: இப்படிப்பட்ட சூழலில், திண்டுக்கல் லியோனி மீது போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.. காரணம், அரசு கொடுத்த இன்னோவா காரை இவர் பயன்படுத்தி வருகிறார். அதன் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர், எக்ஸ்ட்ரா பம்பர், நம்பர் பிளேட் ஆகியவை இருந்ததால் சென்னை ஆலந்தூர் பகுதி போக்குவரத்து காவல்துறையினர் 2500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
திமுக கட்சி ஆட்சியில் இருந்தாலும், திண்டுக்கல் லியோனி முக்கிய பதவி வகித்தாலும் அவருக்கே இந்த நிலையா? என்று ஒருபக்கம் அதிர்ச்சியும், இன்னொரு பக்கம் "நடுநிலை" முடிவு என்றும் கமெண்ட்கள் சோஷியல் மீடியாவில் வெடித்து வருகின்றன.. லியோனியின் இந்த நிகழ்வைதான், திமுக சீனியர் தலைவர், கேஎஸ் ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
அதிருப்திகள்: திமுகவின் மூத்த நிர்வாகி நெல்லையை சேர்ந்த கேஎஸ் ராதாகிருஷ்ணன்.. திமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பு வகித்தவர்.. ஆனால், நிறைய அதிருப்திகளில் காணப்பட்டார்.. கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லை என்று மனப்புழுக்கத்தில் இருந்ததாக தெரிகிறது.. மாநிலங்களவை எம்பி பதவி தனக்கு கிடைக்கும் என்று நிறைய எதிர்பார்த்தார்.. ஆனால், கிடைக்கவில்லை..
இதனால், தன்னுடைய ஆதங்கத்தை சமூக ஊடகங்களில், பதிவுகளாக பதிவிட்டார். இதனால், திமுக தலைமைக்கு தலைவலி ஏற்பட்டதாககூட செய்திகள் கசிந்தன.. பிறகு, கட்சியின் கொள்கைக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, குற்றம்சாட்டப்பட்டதுடன், திடீரென கட்சியிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.. இதற்கு பிறகு, வெளிப்படையாகவே திமுக மேலிடத்தை விமர்சித்து பதிவுகளை போட்டு வருகிறார்.. நிறைய கேள்விகளையும் தன் பதிவின் மூலம் எழுப்பி வருகிறார். அப்படித்தான், இப்போது லியோனி சிக்கி உள்ளார்..
லியோனிக்கு அபராதம்: போக்குவரத்து விதிமீறலில் அபதாரம் விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதிவு போட்டுள்ளார். அதில், "முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, தமிழக அரசுக்கு சொந்தமான பாடநூல் கழகம் வழங்கிய இனோவா காரை பயன்படுத்தி வருகிறார். அதில் கட்சி ஸ்டிக்கர் மற்றும் தேவையில்லாத பம்பர் என பயன்படுத்தியதால் சென்னை ஆலந்தூர் பகுதி காவல்துறையினர் அவருக்கு 2500 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள்.
முட்டாள்தனமாக அரசுக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாத இது போன்ற அறிவுகள் எல்லாம், இந்த தேசத்தினுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிள்ளைகளின் கல்விக் கொள்கையை வகுக்கும், பாடநூல் கழகத்தில் இருப்பது மிகவும் கேவலமானது. இவருக்கு திமுகவில் பதவிகள்.
அத்துமீறல்: ஆனால், 'டெசோ இலங்கை தமிழர் பிரச்சனை, ஜெயலலிதா வழக்கு, நள்ளிரவு கலைஞர் கைது, ஸ்டாலின் வேளச்சேரி வீட்டில் காவல்துறை அத்துமீறல், மாநில மனித உரிமை கமிஷன், அண்ணா நகர் ராமேஷ் சிக்கல், கனிமொழி 1992 சிக்கல் மற்றும் தூத்துக்குடி தேர்தல்' என பல பணிகள் புரிந்த எனக்கு கட்சியிலிருந்து நீக்கம்.
நேற்று வரை திமுகவை, கலைஞரை திட்டியவர்களுக்கு உங்களால் மரியாதை, பதவிகள் அள்ளி வழங்கப்படுகிறது. வாழ்க உங்கள் கொற்றம், பரிபாலனம்; உங்கள் நீதி, நியாயம், நேர்மை! இதற்கு காலம் நிச்சயம் ஒருநாள் உங்களை கேள்வி கேட்கும்' என்று கே.எஸ்.ராதாகிருஷ்ணன் குமுறி கொட்டியுள்ளார்.. திமுக மேலிடத்தில் கேஎஸ்ஆர் நியாயம் கேட்கும் இந்த பதிவுதான், அறிவாலயத்தில் சலசலப்பை கூட்டி வருகிறது... மேலும், அதிருப்தியில் தகித்து கொண்டிருக்கும் மேலும் சிலரோ, இதை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தும் வருகிறார்கள்..
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications