ஆஹா.. அடித்து ஆடுகிறாரே பிடிஆர்.. ஐடி துறையில் இனி மாஸ்தான்.. இந்த போட்டோவை பாருங்க.. புரியும்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் இன்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளாக பெரிய ஐடி முதலீடுகள் வரவில்லை. அதை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகளை செய்ய வேண்டும்.

Are these the pictures for NEO Tidel Parks at Salem, Tuticorin & Thanjavur?

1996-2001ல் எந்த அடித்தளம் போடப்பட்டதோ அதை வைத்தே தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பிழைத்து வருகிறது. புதிய திட்டங்களின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் ஐடி துறையில் புதிய மாற்றங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக பெங்களூர், ஹைதராபாத் ஐடி துறையின் வேகத்தால் நாம் அடைந்த பின்னடைவை சரி செய்ய வேண்டும். முக்கியமாக பாரம்பரிய ஐடி தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஏஐ தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

Are these the pictures for NEO Tidel Parks at Salem, Tuticorin & Thanjavur?

அதோடு பின் டெக் துறையிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டின் புதிய ஐடி துறை அமைச்சராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதவி ஏற்றுள்ளார். நிதித்துறையை சிறப்பாக கவனித்து வந்த அவர் தற்போது ஐடி துறை அமைச்சராக பதவி ஏற்று உள்ளார்.

அவர் ஐடி துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள முதல் மாதத்திலேயே தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் ஐடி பார்க் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது.

Are these the pictures for NEO Tidel Parks at Salem, Tuticorin & Thanjavur?

அதன்படி சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் இன்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

92.50 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

இதற்காக இந்த மூன்று மாவட்டங்களில் பல்வேறு விதிகள் மாற்றப்பட உள்ளன. ஐடி பார்க்க தொடங்க வசதியாக மின்சார சலுகைகள் , பல மாடி கட்டிடம் கட்ட வசதியாக எப்எஸ்ஐ சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் நியோ டைடல் வகை பூங்கா அமைக்கப்படும். அதாவது சென்னையில் உள்ளதா மினி வகை ஐடி பூங்காவாக இது இருக்கும். இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

Are these the pictures for NEO Tidel Parks at Salem, Tuticorin & Thanjavur?

பல மாடி கட்டிடங்களுடன், ஹை ரைஸ் ஐடி பார்க்குகள் போல இந்த மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

பட்ஜெட்:கடந்த 2022 பட்ஜெட்டில் புதிய டைடல் பூங்காக்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

திருவள்ளூர் மாவட்டத்திம் மின்கல பூங்கா, பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும். தூத்துக்குடியில் ரூ4,500 கோடியில் சர்வதேச அறைக்கலன் தயாரிப்பு பூங்கா அமைக்கப்படும். விழுப்புரம், வேலூர், தூத்துக்குடி, திருப்பூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்

Are these the pictures for NEO Tidel Parks at Salem, Tuticorin & Thanjavur?

பின்தங்கிய 9 மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும். திருவண்ணாமலை, தருமபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி, நாகப்பட்டினம் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும். சிறு, குறு தொழில் சிக்கல்களை ஆராய குழு அமைக்கப்படும் .

ஓசூரில் கழிவுநீர் சுத்தகரிப்பு ஆலை அமைக்கப்படும். தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்படும். ரூ225 கோடியில் கோவையில் 500 ஏக்கரில் ராணுவ தளவாட உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். ரூ165 கோடியில் 2 நிதிநுட்ப நகரங்கள் உருவாக்கப்படும். இதற்காக நிதிநுட்ப கொள்கை வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பட்ஜெட்டில் நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+