நாளை அரியலூர் "டாக்டர்" அனிதாவின் பிறந்த நாள் #happybirthdayanitha

அரியலூர் அனிதாவின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: மருத்துவ கனவு கண்டு அது ஈடேறாததால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.

அரியலூரை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி சண்முகத்தின் மகள் அனிதா. இவர் பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார்.

 Ariyalur Anitha's birthday tomorrow

ஆனால் கடந்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வில் அனிதாவால் சோபிக்க முடியவில்லை. இதனால் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார்.

எனினும் அந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றமும் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துமாறு உத்தரவிட்டது.

இதனால் அனிதாவின் மருத்துவர் கனவு கானல் நீராகி போனதை எண்ணி அந்த ஏழை மனம் விம்மியது. எனினும் துக்கம் தாளாமல் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. மருத்துவர் கனவோடு மறைந்த அனிதாவுக்கு சமூகவலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+