”புல்” மப்பில் பஸ்ஸை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்- ஷாக் ஆகிப் போன பயணிகள்
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் குடிபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டுனர் இயக்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பேருந்து தாறுமாறாக சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். பின்னர் ஓட்டுநரை பயணிகள் பிடித்து பேருந்தை ஓரமாக நிறுத்தினர்.

அப்போது ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஓட்டுநர் பூமிநாதனை காவல்நிலையத்தில் பயணிகள் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து ஓட்டுநர் பூமிநாதனை கைது செய்து, சிறையில் அடைத்த போலீசார் அவர் மேல் குடிபோதையில் பேருந்து ஓட்டியது, விதிகளை மீறியது உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications