For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடரும் அதிர்ச்சி.. ஒரே நாளில் 8 விவசாயிகள் பலி.. 100ஐ தாண்டிய விவசாயிகள் மரணம்

பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் அரியலூர்,தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 7 விவசாயிகள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Google Oneindia Tamil News

அரியலூர்: நீரின்றி பயிர்கள் கருகியதால் விவசாயிகளின் மரணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று காலை அரியலூர் மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆறு பேர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பயிர் கருகியதைப் பார்த்த விவசாயி கணேசன் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சோளப்பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி பாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். விவசாயிகளின் இறப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஒட்டக்கோயில் கிராமத்தில் வசித்து வந்தவர் விவசாயி கலியபெருமாள். இவர் தனது விவசாய நிலத்தில் மக்காசோளம் பயிரிட்டிருந்தார். வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் மக்காசோளம் கருகத் தொடங்கியது.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் தனது நிலத்திற்கு சென்ற விவசாயி கலியபெருமாள், காய்ந்து கருகிய மக்காசோள பயிரைப் பார்த்து மேலும், அதிர்ச்சி அடைந்தார். அதே இடத்தில் மயங்கி சுருண்டு விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கிப் பார்த்தப் போது அவர் உயிர் பிரிந்திருந்தது.

அரியலூர் கலியபெருமாள்

அரியலூர் கலியபெருமாள்

பயிர்கள் கருகிய சோகத்தில் கடந்த இரு தினங்களாக மன உலைச்சலில் கலியபெருமாள் இருந்ததாகவும், அந்த மனவேதனை மேலும் அதிகரித்து இன்று காலை மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நாகை சிவானந்தம்

நாகை சிவானந்தம்

இதே போன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி 55 வயதான சிவானந்தம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நெற்பயிர் கருகியதால் சிவானந்தம் கவலையில் இருந்ததாகவும், மன வேதனை அதிகரித்தால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இரும்பலக்குறிச்சி தர்மன்

இரும்பலக்குறிச்சி தர்மன்

இரும்பலக்குறிச்சியில் வசித்து வந்த மாற்றுத்திறனாளியான விவசாயி தர்மன் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கருகிய நெற்பயிரை கண்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு விவசாயி தர்மன் மரணம் அடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே புத்தூரில் கருகிய நெற்பயிரை கண்டு மாரடைப்பு ஏற்பட்டு நவசீலன் என்ற விவசாயி உயிரிழந்துள்ளார்.

அரியலூர் சக்கரவர்த்தி

அரியலூர் சக்கரவர்த்தி

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ஓலையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்கரவர்த்தி, நீரின்றி பயிர்கள் வாடியதைக் கண்டு மனம் உடைந்து மாரடைப்பு ஏற்பட்டதால் இன்று உயிரிழந்தார்.

ராமநாதபுரம் சித்தய்யா

ராமநாதபுரம் சித்தய்யா

இதே போன்று, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் விவசாயி ஒருவர் உயிர் இழந்துள்ளார். பயிர்கள் கருகியதை கண்ட அதிர்ச்சியில் டி.வி.கே.எஸ் புரத்தை சேர்ந்த விவசாயி சித்தய்யாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 60 வயதான அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தீர்வு எப்போது?

தீர்வு எப்போது?

வறட்சியின் பாதிப்பால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 100ஐத் தொடப் போகிறது. பாதிப்படைந்த விவசாய நிலங்களை தமிழக அரசு ஆய்வு செய்து வரும் நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகளும், அவர்களது குடும்பத்தினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். என்றாலும், தமிழக அரசு இதுபற்றி வாய் திறக்காமல் உள்ளது கவலை அளிக்கிறது.

English summary
Ariyalur farmer died of cardiac arrest after his crop failed today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X