காதல் சர்ப்ரைஸ்.. பெங்களூர் காதலனை கட்டி எரித்த பிரேமா.. கூகுள் சர்ச் ஹிஸ்டரியை கண்டு அலறிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூருவில் காதலனை அவரது காதலியே வெளிநாட்டு பாணியில் காதல் செய்வதாகக் கூறி, கை, கால்களைக் கட்டி உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் போலீசாரை பதற வைத்துள்ளது.. தொடர்ந்து இதுதொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், இளைஞன் ஒருவனை உயிருடன் எரித்து கொன்ற சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னும் கர்நாடக மாநிலத்தில் நீங்கவில்லை.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான கிரண், பெங்களூரு ராஜாஜிநகர் பாஷியம் சர்க்கிள் பகுதியில் தங்கி அங்கிருக்கும் ஒரு முன்னணி செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

Prema case

அதே நிறுவனத்தில் பணியாற்றிய பெங்களூரு அஞ்சனாபுராவைச் சேர்ந்த பிரேமா (27) என்பவருடன் அவருக்குக் காதல் மலர்ந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த இவர்களது காதலில், சமீபத்தில் கிரண் தனது பழைய காதலியுடன் மீண்டும் நெருக்கமானதால் விரிசல் ஏற்பட்டது.

தன்னைத் தவிர்த்துவிட்டு முன்னாள் காதலியுடன் கிரண் நெருக்கமாக இருப்பதை அறிந்த பிரேமா, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். இதற்காக வெப்சைட்டில் கொலை செய்வது எப்படி என்பது குறித்த வீடியோக்களைப் பார்த்துள்ளார்.

பிளாஸ்டிக் பெல்ட்கள்

தனது திட்டத்தைச் செயல்படுத்த ஆன்லைன் மூலம் கைவிலங்கு மற்றும் பிளாஸ்டிக் பெல்ட்களை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி இரவு, தனது வீட்டுக்கு கிரணை வரவழைத்த பிரேமா, "உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறேன், வெளிநாட்டுப் படங்களில் வருவது போல நாம் காதல் செய்வோம்" என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பி அரை நிர்வாண நிலையில் இருந்த கிரணின் கை மற்றும் கால்களைக் கட்டிலோடு சேர்த்துத் தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த கைவிலங்கு மற்றும் பெல்ட்டுகளால் கட்டியிருக்கிறார். ஏன் இவ்வளவு இறுக்கமாக என்னை கட்டுகிறாய் என்று காதலன் கேட்டுள்ளார். நான் சர்ப்ரைஸ் தந்துவிட்டு சொல்றேன் என்றாராம் பிரேமா.

கண்கள் கட்டப்பட்டு சர்ப்ரைஸ்

கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த கிரண் மீது, குளியலறையிலிருந்து எடுத்து வந்த மண்ணெண்ணெயைத் திடீரென ஊற்றிப் பிரேமா தீ வைத்துள்ளார். உடல் கருகி கிரண் துடித்த காட்சியைத் தனது செல்போனில் வீடியோ எடுத்து ரசித்துள்ளார்.

ஆனால், கிரண் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் உட்பட அனைவரையும் நம்பவைத்து பிரேமா நாடகமாடினார். எனினும், அதை போலீசார் நம்பவில்லை.. உடனே பிரேமாவின் செல்போனை வாங்கி பார்த்து, அதில் கிரண் உயிருடன் எரியும் வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..

இதையடுத்து, பிரேமாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.. அப்போது காவல்துறையினரிடம் பிரேமா அளித்த வாக்குமூலத்தில், "கடந்த 2 வருடங்களாக செல்போன் கடையில் வேலை பார்த்தபோது நாங்கள் காதலித்து வந்தோம்.. ஆனால் அதற்கு முன்பே, கிரண் வேறு ஒரு பெண்ணை காதலித்திருந்தார். ஆனால் அந்த பெண்ணை பிரிந்திருந்தார்..

பிளாக் செய்த கிரண்

அதற்கு பிறகுதான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது.. சமீபத்தில் தன்னுடைய முன்னாள் காதலியுடன் கிரண் நெருக்கமாக இருப்பது எனக்கு தெரியவந்தது.. என்னிடம் பேசுவதையும் கிரண் நிறுத்திவிட்டார்.. என் செல்போன் நம்பரையும் பிளாக் செய்துவிட்டார்.. போதாக்குறைக்கு முன்னாள் காதலியின் பிறந்தநாளையும் கொண்டாடி, அந்த போட்டோக்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்தார்,. அதுதான் எனக்கு ஆவேசத்தை தந்தது.. முன்னாள் காதலியை கிரண் கல்யாணம் செய்துவிடக்கூடாது என்று நினைத்தேன்.

அவன் எனக்குக் கிடைக்கவில்லை என்றால் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். அதனால்தான் ஃபாரின் டைப்பில், சர்ப்ரைஸ் காட்டுவதாகக் கூறி அவனை வரவழைத்துக் கொன்றேன்" என்று அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

உடல் ஒப்படைப்பு

இதனிடையே, பெங்களூரு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.. அப்போது அவர் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட நபரின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்த விதம் எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தீவிர விசாரணையில் பிரேமா குற்றத்தை ஒப்புக்கொண்டார்" என்றார்.

இந்தக் கொடூரச் செயலுக்காகப் பிரேமா மீது கொலை (IPC Section 302), ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் பேடரஹள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். கிரணின் உடல் விக்டோரியா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மதியம் அவரது தந்தை நரசிம்மய்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரை நிர்வாண கோலம்

மகனின் உடலைப் பார்த்து அவர் கதறி அழுத காட்சி காண்போரை உலுக்கியது. கிரணின் தாயார் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தச் செய்தி தற்போது கர்நாடகாவையே உலுக்கியுள்ளது.

கிரண் உயிரிழந்ததை உறுதி செய்ததுமே, தானும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தாராம் பிரேமா.. ஆனால், தீ வீடு முழுவதும் பரவியதால் பயந்துபோன பிரேமா, அரை நிர்வாண நிலையிலேயே வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டு பெண், பிரேமாவை அழைத்து சென்று உதவிசெய்திருக்கிறார்.. இதுவும் விசாரணையில் வெளிவந்துள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+