Rajinikanth: புதிய சீன் கிரியேட் செய்யவே ஸ்டாலினை ரஜினி சந்தித்தார்! காங்கிரஸ் எம்பி கருத்து
திருச்சி: புதிய சீன் கிரியேட் செய்யத்தான் திமுக தலைவர் ஸ்டாலினை, நடிகர் ரஜினி சந்தித்து பேசியுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி கிறிஸ்டோபர் திலக் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: "தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்றிவிடக் கூடாது என்ற நோக்கில்தான் தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர். அதே கொள்கையின் அடிப்படையில் தான், தமிழக வெற்றிக் கழகத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது.

கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெற்றது என்றால், அதில் கூட்டணி கட்சிகளின் பங்களிப்பும் மிக முக்கியமானது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது."
"காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யச் சொல்பவர்கள், அதேபோல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்ற எம்.பி.க்களையும் ராஜினாமா செய்யச் சொல்வார்களா? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூட காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் மூலமே வெற்றி பெற்றார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா?"
"தற்போதைய அரசியல் சூழலில், ஏதோ ஒரு புதிய 'சீன் கிரியேட்' (Scene Create) செய்ய வேண்டும் என்பதற்காகவே முதல்வர் ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசியுள்ளார்.
"விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ளவர்கள் மற்ற கட்சிகளைப் போலப் பெரும் பணம் செலவு செய்து தேர்தலில் போட்டியிடவில்லை. அதனால் அந்தப் பணத்தை மீண்டும் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வராது. இது ஊழலற்ற அரசியலுக்கு வழிவகுக்கும்." இவ்வாறு கிறிஸ்டோபர் திலக் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. இது திமுகவினருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள்.
இன்று காலை கூட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து பேசினார். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
"வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான சூழலிலும் நான் உங்களுடன் இருப்பேன்" என ஸ்டாலினிடம் ரஜினி கூறியதாக சொல்லப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications