அரியலூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- பாதுகாப்பு அதிகரிப்பு
நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் அரியலூர் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர்கள் கடிதம் எழுதியுள்ளதால் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
அரியலூர்: அரியலூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மர்ம கடிதம் கிடைத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை மிரட்டல் தொடரும் என கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதாவை நீட் தேர்வு காவு கொண்டது. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த அனிதாவிற்கு நீட் தேர்வு எமனாக அமைந்து விட்டது.

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாணவர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அரியலூர் ரயில் நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், ரத்து செய்யும் வரை மிரட்டல் தொடரும் என்றும் மர்மநபர்கள் அந்த கடிதத்தில் மிரட்டல் விடுத்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் ரயில் நிலையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரியலூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications