18 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள தீவிரவாதி சித்திக்கிற்கு பிடிவாரண்ட்
சென்னை: இந்து முன்னணி அலுவலக குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி சித்திக்கிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் கடந்த 1995ம் ஆண்டு குண்டு வெடித்த வழக்கில் தீவிரவாதி சித்திக் உள்பட 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் சித்திக்கை தவிர மற்ற 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் சித்திக் மட்டும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறான்.
அவன் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசார் கையில் சிக்காமல் உள்ளான். இந்நிலையில் சித்திக்கிற்கு எதிராக பிடிவாரண்ட் வழங்குமாறு சிபிசிஐடி போலீசார் எழும்பூர் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கயல்விழி சித்திக்கிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
