ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய ஆயிரத்திற்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ சார்பில் நிலுவையில் உள்ள அவர்களது சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட உடனேயே அவர்களை அழைத்து அரசின் சார்பில் பேசி தீர்வு காண முயன்றிருக்க வேண்டும்.
அதற்கு மாறாக முன்கூட்டியே பல மாவட்டங்களில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்து போராட்டத்தை நசுக்க அரசு எடுத்த முயற்சி கண்டனத்திற்குரியது. அதையும் தாண்டி, இன்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டிய பிரச்சினைகளுக்கு காவல் துறையை பயன்படுத்தி கைது, வழக்கு என்று தமிழக அரசு பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்துவது கண்டனத்திற்குரியது. நேற்றும், இன்றும் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
அதேபோல, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்விற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications