AI-ஐ ஒரு கருவியாக பயன்படுத்துங்கள்.. சுயசிந்தனை மட்டுமே உங்களை முன்னேற்றும்.. முகேஷ் அம்பானி அட்வைஸ்
சாட் ஜிபிடி, டீப்சீக் போன்ற ஏஐ தொழில்நுட்பத்தை இளைஞர்கள் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். உங்களின் முன்னேற்றத்திற்கு உங்கள் சிந்தனை மிகவும் அவசியம் என்று கூறிய அவர், தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றிபெற முடியும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் ஆர்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ் எனப்படும் ஏஐ தொழிற்நுட்பம் மிரட்டி வருகிறது. ஏற்கனவே வந்த சாட் ஜிபிடி போன்ற ஏஐ தொழிற்நுட்பங்களை கட்டிலும் தற்போது சீனா தரப்பில் உருவாக்கப்பட்டுள்ள டீப்சீக் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இளம் தலைமுறையினர் பலரும் ஏஐ தொழிற்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

அமெரிக்கா, சீனா தொழிற்நுட்பங்களிலும் கடுமையான போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் அடுத்ததாக ஏஐ தொழிற்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மேன் முகேஷ் அம்பானி, ஏஐ தொழிற்நுட்பம் ஒரு கருவி தான். உங்களின் முன்னேற்றத்தில் சுயசிந்தனை அவசியம் என்று தெரிவித்திருக்கிறார்.
குஜராத்தில் உள்ள பண்டித தீனதயாள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார். அப்போது முகேஷ் அம்பானி பேசுகையில், 21ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் உலகிலேயே இந்தியா அதிக வளம்மிக்க நாடாக மாறும். அதற்காக இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடாது. விரைவில் நாம் எரிபொருள்களை விடுத்து எனர்ஜியை பயன்படுத்த தொடங்க வேண்டும்.
அதேபோல் இளைஞர்கள் அனைவரும் நிச்சயம் சாட் ஜிபிடியை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஏஐ தொழிற்நுட்பம் உதவியாக இருக்கும். ஆனால் நாம் முன்னேற வேண்டும் என்றால், நம் சிந்தனையால் மட்டுமே முடியும். ஆர்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ் மூலமாக நாம் முன்னேற்றம் அடைய முடியாது. அதனை யாரும் மறக்காமல் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
தற்போது வேகமாக மாறி வரும் உலகில், நாம் தொடர்ந்து கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றியை தொடர வேண்டுமென்றால் கற்றுக் கொள்வதை நிறுத்த கூடாது. இளைஞர்கள் பலரும் விவசாயிகளுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் பயோ-எனர்ஜி போன்ற புதிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். அது அதிகளவில் புதிய வேலைவாய்ப்புகளை கொடுக்கும்.
அதேபோல் ஏஐ, க்ரீன் எனர்ஜி மற்றும் சந்தைப் பொருட்கள் ஆகிய மூன்றும் தான் மனிதகுலத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யும். அதே நேரத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எதிர்கால தலைமுறையினருக்கு இந்த இடத்தில் வாழ்வதற்கு மேம்படுத்தவும் நாம் பசுமை தொழிற்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications