ஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார்!
சென்னை: ஓவியர் வீரசந்தானம் சென்னையில் இன்று காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட ஓவியர் வீரசந்தானம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார்.
தமிழ் பற்றாளரும் சிறந்த ஓவியருமான வீரசந்தானம் உலக தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவர். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத் தமிழர்களின் நினைவகத்தை தனது ஓவிய திறனால் நிஜமாக்கித் தந்தவர்.

தமிழ் மக்களுக்கான கலையையும் மண்ணுக்கான அரசியலையும் சுமந்து திரிந்த மக்கள் கலைஞன் 71 வது வயதில் மறைந்துள்ளார். கும்பகோணம் ஓவிய பள்ளியில் படித்து, மும்பையில நெசவாளர் பணி மையத்தில் டிசைனராக பணியில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து, தமிழ் இனத்துக்காகப் போராட வேண்டும் என்ற நோக்கோடு விருப்ப ஓய்வில் வெளியேறினார்.
கடந்த ஆண்டு அவருக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து, நோயிலிருந்து மீண்டு, தமிழர் நலன் சார்ந்த பணிகளை மேற்கொண்டார். ஆனால் இன்று திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மறைந்துவிட்டார்.
"டாஸ்மாக்கை, மக்கள் இழுத்து மூடுவதில் இருந்து அடித்து நொறுக்கும் எண்ணத்துக்கு வந்திருக்காங்க. அந்த எண்ணம் தீவிரம் அடையறதுக்குள்ள அரசாங்கமே டாஸ்மாக்கை மூடணும்; தமிழினத்தைக் காப்பாத்தணும்!" என்பதுதான் அவரின் கடைசிக்கால கோரிக்கையாக இருந்துள்ளது கவனிக்கத்தக்க விஷயம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications